இசுலாமிய மெய்ஞ்ஞான இலக்கியம்

இசுலாமிய மெய்ஞ்ஞானம் அரபு மொழியில், தஸவ்வுப் எனப்படுகிறது. உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி,மாசற்ற உயர் பண்புகளை வளர்த்து,அகத்தையும் புறத்தையும் பக்குவப்படுத்தும் வழிகளைக் கூறுவது இவ்வகை இலக்கியங்கள்.

இசுலாமியச் சித்தர்கள்

தொகு

இசுலாமிய மெய்ஞ்ஞானப் பாடல்களைத் தமிழில் தந்தவர்கள் தக்கலை பீர் முகம்மது அப்பா, குணங்குடி மஸ்தான் சாகிபு, கோட்டாறு ஞானியர் சாகிபு முதலானவர்கள். இவர்கள், இசுலாமியச் சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

மெய்ஞ்ஞான நூல்கள்

தொகு

இசுலாமிய மெய்ஞ்ஞானிகளின் சுடர் விளக்காகத் திகழ்ந்தவர் பீர் முகம்மது. இவரின், திருநெறி நீதம் எனும் இலக்கியம் புகழ்பெற்றதாகும். இவர் படைத்த, ஞானரத்தினக் குறவஞ்சி எனும் நூல் பதினெண் சித்தர்கள் தொகுப்பில் உள்ளது. இவரைக், கனி என்பவர், தமிழ்நாட்டு மௌலானா ரூபி என்று புகழ்ந்துள்ளார். ஞானியார் சாகிபுவின், திருமெய்ஞ்ஞானத் திரட்டு எனும் நூல் மெய்ஞ்ஞானக் கருவூலமாகும். முகம்மது மதினா சாகிபின், வேதாந்த ரத்தினம், சாகுல் ஹமீதின்,ஞான வேதாந்தம் முதலின குறிப்பிடத்தக்க மெய்ஞ்ஞான நூல்களாகும்.

உசாத்துணை

தொகு

1) மு.அப்துல் கறீம்," இஸ்லாமும் தமிழும்"- கழக வெளியீடு 1982. 2) மு.முகம்மது உவைஸ், மு.அஜ்மல்கான்," இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு "-தொகுதி-1.