இசுலாம் உலகத்தின் கலைக்களஞ்சியம்

இசுலாம் உலகத்தின் கலைக்களஞ்சியம் ( Encyclopaedia of the world of Islam) இசுலாமிய மதம், இசுலாமிய மக்களின் வரலாறு, இசுலாமிய நாகரிகம் மற்றும் இசுலாம் மதத்தின் ஆரம்பம் முதல் இப்போது வரையான பண்பாடு ஆகியவற்றை பாரசீக மொழியில் விளக்கும் ஒரு கலைக்களஞ்சியம் ஆகும். இசுலாம் உலகத்தின் கலைக்களஞ்சியம் தெகுரானில் நிறுவப்பட்டுள்ள இசுலாமிய கலைக்களஞ்சிய அறக்கட்டளை நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. பார்சி மற்றும் ஆங்கில மொழிகளில் 75 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட புத்தகங்களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், இசுலாம் உலகத்தின் கலைக்களஞ்சியம் 29 தொகுதிகள் மற்றும் இதன் 12 தொகுதிகள் அரேபிய மொழி மொழிபெயர்ப்புகளையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 120 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட ஆசிரிய உறுப்பினர்களைக் கொண்ட ஒரு ஆராய்ச்சி நிறுவனமாக ஓர் ஆராய்ச்சி நூலகத்தின் கட்டமைப்பில் இந்த நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. [1]

கட்டுரைகள், அகர வரிசைப்படி அமைக்கப்பட்டு, அறிவின் பரந்த பகுதியை இக்கலைக்களஞ்சியம் உள்ளடக்கியுள்ளது: குரானிய அறிவியல், தீர்க்கதரிசன மரபுகள், இசுலாமிய சட்டம் , இறையியல், ஆன்மீகம், தத்துவம், கடிதங்கள் மற்றும் கலை ஆகியவற்றின் தொழில்நுட்ப சொற்கள்; நபிகள், முசுலீம் புனிதர்கள் மற்றும் இமாம்களின் வாழ்க்கை வரலாறுகள்; குரான் வர்ணனையாளர்கள், பாரம்பரியவாதிகள், சட்டவாதிகள், முசுலீம் இறையியலாளர்கள், தத்துவவாதிகள், விஞ்ஞானிகள், ஆன்மீகவாதிகள், வரலாற்றாசிரியர்கள், கவிஞர்கள் மற்றும் இசுலாமிய உலகின் கலைஞர்களின் வாழ்க்கை, படைப்புகள் மற்றும் பார்வைகள்; இசுலாத்தின் அரசியல் வரலாறு, கலீஃபாக்கள், சுல்தான்கள், விசியர்களின் வாழ்க்கை வரலாறுகள் மற்றும் கடந்த கால ஆட்சி வம்சங்களின் கணக்குகள்; கடந்த கால மற்றும் தற்போதைய இசுலாமிய உலகின் நாடுகள் மற்றும் நகரங்களின் புவியியல்; மதச்சார்பற்ற மற்றும் மத நினைவுச்சின்னங்களின் தொல்லியல்; மத விழாக்கள் மற்றும் சிறப்பு நாட்கள்; கலைப்பொருட்கள், உடைகள், உணவுப் பொருட்கள், தாவரங்கள், மருந்துகள் போன்ற இசுலாமிய நிலங்களுக்குத் தனித்தன்மை வாய்ந்தவை, மற்றும் பல கட்டுரைகள் கலைக்களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ளன. [1] [2]

இசுலாமியக் கலைக்களஞ்சியத்துடன் ஒப்பிடும் போது, இசுலாமிய உலகத்தின் கலைக்களஞ்சியம் பல்வேறு ஆதாரங்கள், இறையியல் கட்டுரைகளின் அளவு மற்றும் சியா அறிவுசார் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் (குறிப்பாக சியா இறையியல் மற்றும் இமாமியா கூறுகள்) முக்கியத்துவம் ஆகியவற்றில் வேறுபடுகிறது. இசுலாம் கலைக்களஞ்சியத்தில் உள்ள இறையியல் கூறுகளின் எண்ணிக்கை 404 ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, சியைட்டு இறையியல் மற்றும் ஈரானிய பாடங்களில் அதிக கவனம் செலுத்தும் இசுலாமிய கலைக்களஞ்சியத்தில் 749 உள்ளீடுகள் உள்ளன. இசுலாமிய கலைக்களஞ்சியத்தில் இறையியல் உள்ளீடுகள் எந்த சியைட்டு மூலங்களையும் குறிப்பிடவில்லை மற்றும் அனைத்து குறிப்புகளும் சன்னி மூலங்களைக் குறிக்கின்றன, அதே சமயம் இசுலாம் உலக கலைக்களஞ்சியத்தில் உள்ள ஆதாரங்களின் மத விநியோகம் சியா மற்றும் சன்னி மூலங்களிலிருந்து பயனடைகிறது. [3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Encyclopaedia of the world of Islam". Encyclopedia Islamica Foundation."Encyclopaedia of the world of Islam". Encyclopedia Islamica Foundation.
  2. "The Encyclopaedia of The World of Islam". Athare Bartar. Encyclopaedia Islamica Foundation.
  3. "List of Articles The Encyclopedia of World of Islam". Regional Science and Technology Information Center.