இசுலாம் கரிமோவ்

உஸ்பெகிஸ்தான் தலைவர்களில் ஒருவர்

இசுலாம் அப்துகனியெவிச் கரீமவ் (Islam Abduganiyevich Karimov, உசுபேகியம்: Islom Abdugʻaniyevich Karimov, உருசியம்: Ислам Абдуганиевич Каримов; 30 சனவரி 1938 – 2 செப்டம்பர் 2016) உஸ்பெகிஸ்தான் நாட்டின் முதல் அதிபா். 1991 முதல் 2016 இல் தான் இறக்கும் வரை உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபராகப் பணிபுரிந்தார்.

இசுலாம் கரீமவ்
Islom Karimov
Ислам Каримов
உஸ்பெகிஸ்தான் முதல் அதிபர்
பதவியில்
1 செப்டம்பர் 1991 – 2 செப்டம்பர் 2016
பிரதமர்
  • அப்துல்ஹஷீம் முத்தாலவ்
  • உத்கீர் சுல்தானவ்
  • ஷவ்காத் மிர்ஸியோயெவ்
முன்னையவர்பதவி தோற்றுவிக்கப்பட்டது
பின்னவர்நிக்மதில்லா யுல்தஷேவ்
உசுபெக் சோவியத் சோசலிசக் குடியரசின் தலைவர்
பதவியில்
24 மார்ச் 1990 – 1 செப்டம்பர் 1991
முன்னையவர்பதவி தோற்றுவிக்கப்பட்டது
பின்னவர்பதவி நீக்கப்பட்டது
உஸ்பெக் சமவுடைமைக் கட்சியின் முதன்மைச் செயலர்
பதவியில்
23 சூன் 1989 – 1 செப்டம்பர் 1991
முன்னையவர்ரபீக் நிஷோனவ்
பின்னவர்பதவி நீக்கப்பட்டது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இஸ்லாம் அபதுகனியெவிச் கரீமவ்

(1938-01-30)30 சனவரி 1938
சமர்கந்து, உஸ்பெக் சோவியத் சமவுடைமைக் குடியரசு சோவியத் ஒன்றியம்
(தற்போது சமர்கந்து, உசுபெக்கிசுத்தான்)
இறப்பு2 செப்டம்பர் 2016(2016-09-02) (அகவை 78)
தாஷ்கந்து, உசுபெக்கிசுத்தான்
காரணம் of deathபக்கவாதம்[1]
இளைப்பாறுமிடம்சமர்கந்து, உசுபெக்கிசுத்தான்
அரசியல் கட்சி
  • உஸ்பெக் பொதுவுடைமைக் கட்சி (1964–91)
  • உஸ்பெக் மக்கள் ஜனநாயகக் கட்சி(1991–2007)
  • உஸ்பெக் முற்போக்கு ஜனநாயகக் கட்சி(2007–16)
துணைவர்(s)நதாலியா பெத்ரோவ்னா குச்மீ (1964–196?, மணமுறிவு)
தத்தியானா கரீமவா (1967–2016, கணவர் இறப்பு)
பிள்ளைகள்
  • பெத்ர் (பி. 1960s)
  • குல்னாரா கரீமவா (பி. 1972)
  • லோலா கரீமவா தில்யாயெவா (பி. 1978)

இவா் இளம் வயதில் ஆதரவற்றோா் இல்லத்தில் வளா்ந்து பொருளாதாரம் மற்றும் இயந்திரப் பொறியியலைப் பயின்றாா். 1964 முதல் 1991 சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியிலிருந்த கரீமவ் 1989-ம் ஆண்டு முதல் 1991 வரை உஸ்பெக் பொதுவுடைமைக் கட்சியின் இறுதியான முதன்மைச் செயலராகப் பொறுப்பிலிருந்தார். உஸ்பெக் சோவியத் சமவுடைமைக் குடியரசின் அதிபராக 24 மார்ச் 1990 முதல் 1 செப்டம்பர் 1991 வரை இருந்தார். உஸ்பெக் பொதுவுடைமைக் கட்சியிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட உஸ்பெக் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவராக 2007 ஆம் ஆண்டுவரை பொறுப்பிலிருந்தார். பின்னர் உஸ்பெக் முற்போக்கு ஜனநாயகக் கட்சியாக உருமாற்றமடைந்த அக்கட்சியின் தலைவராக 2016 ஆம் ஆண்டுவரையிருந்தார்.[2]

பக்கவாதத்தின் விளைவால்[3][4] 2 செப்டம்பர் 2016 இல் இறந்தார்.[5]

சான்றுகள் தொகு

  1. "Obituary: Uzbekistan President Islam Karimov". 2 அக்டோபர் 2016. http://www.bbc.co.uk/news/world-asia-37218158. 
  2. Hierman, Brent (2016). Russia and Eurasia 2016-2017. The World Today Series, 47th edition. Lanham, MD: Rowman & Littlefield. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4758-2898-6. p. 314.
  3. "President Islam Karimov of Uzbekistan Suffers Brain Hemorrhage, Daughter Says". The New York Times. 29 August 2016. https://www.nytimes.com/2016/08/30/world/asia/uzbekistan-president-islam-karimov.html. பார்த்த நாள்: 29 August 2016. 
  4. "Uzbek leader's illness raises fears of power vacuum amid mounting threat". NBC News. 29 August 2016. http://www.nbcnews.com/news/world/uzbek-president-islam-karimov-hospitalized-raising-fears-power-vacuum-n639331. பார்த்த நாள்: 29 August 2016. 
  5. "Islam Karimov: Uzbekistan president's death confirmed". BBC. 2 September 2016. பார்க்கப்பட்ட நாள் 2 September 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுலாம்_கரிமோவ்&oldid=2712781" இலிருந்து மீள்விக்கப்பட்டது