முதன்மை பட்டியைத் திறக்கவும்
இச்சான் மெக்கன்ரோ

இளைய இச்சான் பேட்டரிக் மெக்கன்ரோ (ஜான் மெக்கன்ரோ) (பிறப்பு 16 பிப்ரவரி 1959 வீசுபாடன் செருமனி) என்பவர் தனிநபர் இரட்டையர் என்று இரு பிரிவிலும் உலகின் முதல் நிலை வீரராக இருந்த அமெரிக்க டென்னிசு வீரர் ஆவார். டென்னிசின் தலைச்சிறந்த வீரர் என கருதப்படுகிறார். பந்தை அனுப்பும் வித்தைக்காகவும் வலைக்கு அருகிலிருந்து விளையாடும் திறனுக்காகவும் அறியப்படுகிறார். டென்னிசு அரங்கத்தில் நடத்துகொள்ளும் மோதல் போக்கின் காரணமாக அடிக்கடி நடுவர்களிடமும் டென்னிசு அலுவலர்களிடமும் சிக்கலை எதிர்கொள்வார்.

தனிநபர் பிரிவில் 77 கோப்பைகளும் இரட்டையர் பிரிவில் 78 கோப்பைகளும் பெற்றுள்ளார். ஓப்பன் காலத்தில் இரண்டு பிரிவையும் சேர்த்து அதிக கோப்பைகள் வாங்கியவர் இது வரை இவரே. ஏழு கிராண்ட் சிலாம் கோப்பைகளை பெற்றுள்ளார். நான்கு முறை யுஎசு ஓப்பனும் மூன்று முறை விம்பிள்டன் கோப்பையும் ஒன்பது இரட்டையர் கிராண்ட் சிலாம் கோப்பைகளும் பெற்றுள்ளார்.ஒரு முறை பிரெஞ்சு ஓப்பன் இறுதி ஆட்டத்திலும் இரு முறை ஆத்திரேலிய ஓப்பன் இறுதி ஆட்டத்திலும் கலந்து உள்ளார். அரை இறுதியில் கலந்து கொள்வதே இவரின் சிறந்த ஆட்டமுடிவாகும். ஆண்டு முடிவில் நடைபெறும் போட்டிகளில் இவரின் ஆட்டம் சிறப்பாக இருக்கும். அதில் எட்டு தனிநபர் கோப்பைகளையும் ஏழு இரட்டையர் கோப்பைகளையும் பெற்றது சாதனையாகும். ஆண்டு இறுதியில் மூன்று தனிநபர் கோப்பைகளை மாசுடர்சு கிராண்ட் பிரிக்சிலும் ஐந்தை உலக டென்னிசு சாதனைப்போட்டியிலும் நிகழ்த்தினார். 2000ஆம் ஆண்டு முதல் ஒரே ஒரு ஆண்டு இறுதி போட்டி மட்டுமே நடைபெறுகிறது. மெக்கன்ரோ ஐந்து டேவிசுக் கோப்பைகளை அமெரிக்காவிற்கு பெற்று தந்த அணியில் விளையாடினார். அமெரிக்க அணியின் தலைவராகவும் பணியாற்றினார். டென்னிசு ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற்ற பின் டென்னிசு விளையாட்டின் சாதனைப்போட்டி தொடரின் முதியவர்களுக்கான போட்டியில் பங்குகொள்வதும் பெரிய அளவில் நடைபெறும் டென்னிசு போட்டிகளுக்கு தொலைக்காட்சி வர்ணனையாளராகவும் பணியாற்றுகிறார்.

இளவயது வாழ்க்கைதொகு

இச்சான் மெக்கன்ரோ மூத்த இச்சான் பேட்ரிக் மெக்கன்ரோ என்பவருக்கும் கேத்தரின் டிரசுஆம் என்பவருக்கும் மேற்கு செருமனியின் வீசுபாடன் நகரில் பிறந்தார். இவரது ஐரிசு குடியேறியின் மகனான இவரது தந்தை அமெரிக்க வான் படையில் பணிபுரிந்த போது மேக்கன்ரோ பிறக்கும் சமயம் அங்கு பணியாற்றினார்[1]. 1960இல் அவரது குடும்பம் நியூ யார்க் நகருக்கு குடிபெயர்ந்தது. நியு யார்க்கில் மெக்கன்ரோவின் தந்தை பகல்நேரத்தில் போர்ட்டம் சட்ட பள்ளியில் சட்டம் படித்துக்கொண்டே விளம்பர முகவாரக பணியாற்றினார்.[2] இவருக்கு 1964இல் பிறந்த மார்க்கு 1966இல் பிறந்த பேட்ரிக் ஆகிய இரு இளைய சகோதரர்கள் உண்டு. இதில் பேட்ரிக் தொழில்முறை டென்னிசு ஆட்டக்காரர் ஆவார்.

மெக்கன்ரோ குயின்சிலுள்ள டக்களசுடன் பகுதியில் வளர்ந்தார். எட்டு வயதாக இருக்கும் போது அருகிலுள்ள டக்ளசுடன் குழுவில் இணைந்து டென்னிசு விளையாட தொடங்கினார். ஒன்பது வயதாக இருக்கும் போது இவரது பெற்றோர் இவரை ஈசுடன் லான் டென்னிசு கழகத்தில் சேர்த்துவிட்டனர். விரைவில் இவர் பிராந்திய அளவிலான போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். பின் இவர் தேசிய அளவிலான இளையோருக்கான போட்டிகளில் விளையாடினார். பன்னிரண்டு வயதாக இருந்தபோது தன் வயது உடையவர்களின் தர வரிசையில் ஏழாவது இடத்தில் இருந்தார். லாங் தீவிலுள்ள போர்ட் வாசிங்டன் டென்னிசு கழகத்தில் சேர்ந்தார்.[3] 1977இல் டிரினிட்டி பள்ளியில் படித்தார்.

திருமண வாழ்க்கைதொகு

மெக்கன்ரோ அகாதமி விருது பெற்ற நடிகை டாட்டும் ஓ'நீலை திருமணம் புரிந்துகொண்டார். 1986 முதல் 1994 வரை நீடித்த இத்திருமண வாழ்க்கையில் இருவருக்கும் கெவின், சீன், எமிலி என்ற மூன்று குழந்தைகள் பிறந்தனர். பின்பு மணமுறிவு பெற்றனர், இருவரும் குழந்தைகளுக்கு காப்பாளர்களாக இருக்குமாறு நீதிமன்றம் நியமித்தது. ஓ'நீலின் போதை பழக்கத்தால் 1998 முதல் மெக்கன்ரோவே குழந்தைகளின் காப்பாளராக இருப்பார் என தீர்ப்பாகியது..[4]

1997இல் பாடகி பேட்டி சிமித்தை திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு அன்னா, அவா என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.ref name="tatum" />[5] மெக்கன்ரோ மக்களாட்சி கட்சி ஆதரவாளர் ஆவார், மக்களாட்சி கட்சி அரசியல்வாதிகளுக்கு 15,000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் நன்கொடை அளித்துள்ளார்.[6]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இச்சான்_மெக்கன்ரோ&oldid=2759544" இருந்து மீள்விக்கப்பட்டது