இடஞ்சார் திட்டமிடல்

இடஞ்சார் திட்டமிடல் (Spatial planning) என்பது, பல்வேறு அளவுகளைக் கொண்ட இடங்களில், மக்களதும், நடவடிக்கைகளதும் பரவல் மீது செல்வாக்குச் செலுத்தும் நோக்குடன், பொதுத் துறையால் பயன்படுத்தப்படும் வழிமுறைகளைக் குறிக்கும். இடஞ்சார் திட்டமிடல், எல்லா மட்டங்களிலுமான, நிலப் பயன்பாட்டுத் திட்டமிடலை உள்ளடக்கியுள்ளது. இது, நகர்ப்புறத் திட்டமிடல், பிரதேசத் திட்டமிடல், தேசிய இடஞ்சார் திட்டங்கள் போன்றவற்றைத் தன்னுள் அடக்கும்.

இடஞ்சார் திட்டமிடலுக்குப் பல வரைவிலக்கணங்கள் உள்ளன. ஐரோப்பிய பிரதேச/இடஞ்சார் திட்டப் பட்டயம் (European Regional/Spatial Planning Charter) பின்வருமாறு கூறுகிறது:

பிரதேச / இடஞ்சார் திட்டமிடல், சமூகத்தின், பொருளாதார, சமூக, பண்பாட்டு மற்றும் சூழலியல் கொள்கைகளைப் புவியியல் அடிப்படையில் வெளிப்படுத்துகிறது. அத்துடன் இது ஒரேசமயத்தில், ஒரு அறிவியல் துறையாகவும், நிர்வாக நுட்பமாகவும், பரந்த உத்தியின் அடிப்படையிலான இட ஒழுங்கமைவையும், சமநிலைப் பிரதேச வளர்ச்சியையும், நோக்கமாகக் கொண்ட பல்துறைசார்ந்த, விரிவான அணுகுமுறையாக உருவாக்கப்பட்ட ஒரு கொள்கையாகவும் இருக்கிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடஞ்சார்_திட்டமிடல்&oldid=1912069" இலிருந்து மீள்விக்கப்பட்டது