இடவமைப்பு கொலை
இடவமைப்புக் கொலை (topocide) என்பது வேண்டுமென்றே நிலத்தை தொழிலக விரிவாக்கம் மற்றும் மாற்றத்திற்காக நீக்குதல் ஆகும், இதனால் முந்தைய நிலவமைப்பு மற்றும் அதன் பண்புகள் அழிக்கப்படுகின்றன[1].
இதன் மற்றொரு சொற்கூறு வாழ்விடக்கொலை, வசிப்பிட அழிப்பு ஆகும்; இவ்விரு சொற்களும் ஒரு பொருள் கொண்டவை அல்லது எதிர்மறை பொருள் கொண்டதாக இருக்கலாம். இடவமைப்பு கொலை என்பது அழிப்பவரின் கண்ணோட்டத்தில் இருந்து குறிப்பிடப்படுகிறது (பொதுவாக வெளிநபர்கள்), வசிப்பிட அழிப்பு என்பது குடியிருப்பவர்களின் கண்ணோட்டத்தில் இருந்து குறிப்பிடப்படுகிறது.[2]
இடவமைப்பு கொலை என்பது தொழிலக விரிவாக்கத்திற்காக வேண்டுமென்றே செய்யப்பட்டதின் விளைவு ஆகும். தொழிற்சாலைகள் தோன்றும் போது, மக்களின் வாழ்க்கை தொழிற்சாலையை மையமாக கொண்டு சுழல்கின்றது. புது வேலைகள் தோன்றுகின்றன மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார நிலவமைப்பு முற்றிலும் நிரந்தரமாக மாறுகின்றது.
விவாதத்திற்கு தகுந்த எடுத்துக்காட்டுகள், இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஏற்பட்ட டிரெச்டென் அழிப்பு மற்றும் கம்போடியாவின் கிமெர் ரொகின் அழிப்பு ஆகும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Swanson, Kelly (2009). AP Human Geography 2009. Kaplan. p. 153.
- ↑ Porteous, Douglas; Sandra E. Smith (2001). Domicide: The Global Destruction Of Home. McGill-Queen's Press - MQUP. p. 12.
- ↑ Collins, Andrew E (2009). Disaster and Development. Routledge. p. 109.