இடுக்கி இயக்கம் (இராணுவ உத்தி)
இராணுவ தந்திரம்
இடுக்கி இயக்கம் அல்லது இரட்டை சுற்றி வளைப்பு என்பது ஒரு இராணுவ நடவடிக்கை ஆகும். இதில் படைகள் ஒரே நேரத்தில் எதிரிகளின் படை அமைப்பின் இரு பக்கங்களையும் தாக்குகின்றன.
எதிரிப் படைகள் ஒரு இராணுவத்தின் மையத்தை நோக்கி முன்னேறும் போது இந்த இயக்கம் நிகழ்கிறது. அந்நேரத்தில் இராணுவமானது பதில் செயலாக எதிரிப் படையை தன் வெளிப்புறப் படைகள் மூலம் இரு பக்கங்களிலும் சுற்றி வளைக்கிறது.