இடை மண்டலம்

இடை மண்டலம் அல்லது மீசோ மண்டலம் (Mesosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் படை மண்டலத்துக்கும் வெப்பமண்டலத்திற்கும் இடைப்பட்ட வளியடுக்காகும். வளியடுக்குகளில் மிகவும் குளிர்ந்த வெப்பநிலை நிலவும் அடுக்கு இடை மண்டலமாகும். புவியிலே இயற்கையாகக் காணப்படும் மிகக் குளிர்ந்த இடம் இதுவாகும். புவியின் வளி மண்டலத்தின் 50 கிலோமீற்றர் தொடக்கம் 100 கிலோமீற்றருக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் இடை மண்டலம் உள்ளது.

வளிமண்டலப் படலங்கள் (என். ஓ. ஏ. ஏ.)

வெப்பநிலை தொகு

இடைமண்டலத்தின் வெப்பநிலை உயரம் அதிகமாகும் போது குறைவடைந்து கொண்டு செல்லும். இதன் வெப்பநிலை அதன் உயரமான பிரதேசத்தில் −100 °C (173 K; −148 °F) வரை குறைவடையும். புவியில் இயற்கையாக நிலவும் மிகக் குளிர்ந்த வெப்பநிலை இதுவாகும்.

இந்த அடுக்கின் மேல்பகுதி பூமியில் மிகவும் குளிரான பகுதியாகும். இதன் சராசரி வெப்பநிலை 85 டிகிரி ஆகும். இதன் மேல்பகுதி எல்லையான மீசோபாஸ் வெப்பநிலையானது -100 டிகிரியாக இருக்கிறது. இதன் காரணமாக நீர் உறைந்து பனிக்கட்டியாக உள்ளது. இப்பனியே மேகமாக மாறுகிறது.[1]

ஆதாரங்கள் தொகு

  1. ஓசோன் படலத்தில் ஓட்டை நூல் - ஏற்காடு இளங்கோ பக்கம் 20
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடை_மண்டலம்&oldid=3328954" இலிருந்து மீள்விக்கப்பட்டது