இட்டிரியலைட்டு

சோரோசிலிக்கேட்டு கனிமம்

இட்ரியலைட்டு (Yttrialite) என்பது (Y,Th)2Si2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இட்ரியலைட்டு-(Y) என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. இட்ரியம் தோரியம் சோரோசிலிக்கேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. பச்சை நிறத்தில் இருந்து ஆரஞ்சு மஞ்சள் நிறத்த்தில் சங்குப்புரி பிளவுடன் உருவாகிறது. இட்ரியலைட்டு கனிமம் ஒற்றைச்சரிவச்சு பட்டகப் படிக அமைப்பில் படிகமாகிறது. இதன் ஒப்படர்த்தி அளவு 4.58 என்றும் மோவின் கடினத்தன்மை அளவுகோலின் படி இதன் கடினத்தன்மை அளவு 5 முதல் 5.5 எனவும் அளவிடப்பட்டுள்ளது. தோரியம் உள்ளடக்கம் காரணமாக இட்ரியலைட்டு அதிக கதிரியக்கத்தன்மை கொண்டுள்ளது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் Ytt-Y என்ற குறியீட்டால் இட்ரியலைட்டை அடையாளப்படுத்துகிறது.[3]

இட்ரியலைட்டு
Yttrialite-(Y)
பின்லாந்தில் கிடைத்த இட்ரியலைட்டு-(Y)
பொதுவானாவை
வகைசோரோசிலிக்கேட்டு
வேதி வாய்பாடுY2Si2O7
இனங்காணல்
நிறம்ஆலிவ் பச்சை, பழுப்பு முதல் கருப்பு
படிக அமைப்புஒற்றைசரிவச்சு
பிற சிறப்பியல்புகள் கதிரியக்கம்
மேற்கோள்கள்[1][2]

கடோலினைட்டு கனிமத்துடன் சேர்ந்து இக்கனிமம் தோன்றுகிறது. முதன்முதலில் 1889 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் டெக்சாசு மாநிலத்திலுள்ள் இலானோ மாகாணத்தின் பேரிங்கர் மலையில் உள்ள ரோட் ராஞ்ச்சு தீப்பாறைகளில் இது கண்டறியப்பட்டது. சப்பான் நாட்டின் மிகப்பெரிய தீவான ஒன்சூ தீவிலும், நார்வே மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளிலும் இட்ரியலைட்டு காணப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Mindat
  2. Mineralienatlas.de
  3. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்டிரியலைட்டு&oldid=3805514" இலிருந்து மீள்விக்கப்பட்டது