இட்டெர்பியம் டைரோடியம் டைசிலிசைடு
இட்டெர்பியம் டைரோடியம் டைசிலிசைடு (Ytterbium dirhodium disilicide) என்பது (YbRh2Si2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமச் சேர்மமாகும். இட்டெர்பியம், ரோடியம், சிலிக்கன் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் கன பெர்மியான் துகள்களாலான திண்மநிலை சேர்மமாகும். 2 மில்லிகெல்வின் வெப்பநிலை அளவுக்கு இத்திண்மத்தைக் குளிர்வித்தால் இதுவொரு மீக்கடத்தியாகிறது. இவ்வெப்பநிலைக்கு சற்று அதிகமான வெப்பநிலையில் இதன் வெப்பயேற்புத் திறன் மிக அதிகமாகும். எலக்ட்ரான்கள் இந்நிலையில் இயல்பாக இருப்பதைவிட 1000 மடங்கு கனமாக இருக்கின்றன[1].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Heavy fermions get nuclear boost on way to superconductivity". Phys.org. 28 January 2016. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.