இட்டேரி என்பது இரண்டு முள் வேலிகள் நடுவே செல்லும் வழியினைக் குறிப்பிடும் சொல்லாகும். முள் வேலி, கற்றாழை போன்ற வேலிச்செடிகளை இருபுறமும் கொண்டு அதன் நடுவே செல்லும் மண்பாதையை இட்டேரி என்கின்றனர். இந்த மண்பாதை பொதுவாக மாட்டு வண்டிகள் செல்லக் கூடியதாக இருக்கும். இச்சொல் தமிழகத்தின் கொங்குப் பகுதியில் பரவலான பயன்பாட்டில் உள்ளது. பிற மாவட்டங்களில் இதனைக் குறிக்க வேறு பெயர்கள் பயன்பாட்டிலிருக்கலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்டேரி&oldid=4131961" இலிருந்து மீள்விக்கப்பட்டது