இட்டோசி நொசாகி
இட்டோசி நொசாகி (Hitoshi Nozaki 野崎 一 Nozaki Hitoshi?) 1922 ஆம் ஆண்டில் பிறந்த ஒரு சப்பானிய வேதியியல் அறிஞராவார். இவர் கரிம வேதியியல் துறையில் நிபுணராக விளங்கினார். சப்பானிய கரிம வேதியியல் துறையின் தலைவராகச் செயல்பட்டார். நொசாகி-இயாமா கிசி வினையின் கண்டுபிடிப்பாளர்களில் இவரும் ஒருவராவார். ஓய்வுபெற்ற சிறப்புநிலை பேராசிரியாக தற்போது கியோட்டோ பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வருகிறார்[1].
இட்டோசி நொசாகி Hitoshi Nozaki 野崎 一 | |
---|---|
பிறப்பு | 1922 ஒகாயாமா, சப்பான் |
குடியுரிமை | சப்பான் |
துறை | கரிம வேதியியல் |
அறியப்படுவது | நொசாகி–இயாமா–கிச்சி வினை |
வாழ்க்கை
தொகுசப்பானிலுள்ள ஒகாயாமாவில் 1922 இல் நொசாகி பிறந்தார். தன்னுடைய பட்டப்படிப்பையும் முனைவர் பட்டத்தையும் கியோட்டோ இம்பெரியல் பல்கலைக்கழகத்தில் பெற்றார்[2].
பங்களிப்புகள்
தொகுசப்பானியப் போருக்குப் பிந்தைய பொருளாதார மேம்பாட்டு அதிசயத்தின் போது, இட்டோசி நொசாகி கரிம வேதியியல் துறையின் பலபிரிவுகளில் முன்னணி வகித்தார்.
- டெர்ப்பீன் அடிப்படையிலான செயற்கை கார்பாக்சிலிக் நேர்மின்னயனி
- நொசாகி-இயாமா-கிசி வினை
முக்கியமான மாணவர்கள்
தொகு- ரியொகி நொயோரி: 2001 நோபல் பரிசு வென்றவர்[3].
- யோசிட்டோ கிச்சி: ஆர்வார்டு பல்கலைக்கழக பேராசிரியர்.
விருதுகள்
தொகு- 1979 சப்பானின் வேதியியல் சங்க விருது
- 1986 சப்பான் அகாதெமியின் இம்பீரியல் பரிசு
- 1986 பதக்கமும் கருஞ்சிவப்பு மைப்பட்டையும்
- 1992 புனிதப் புதையல் விருது
- 1993 சப்பானின் செயற்கை கரிம வேதியியல் விருது
- 1999 சப்பான் அகாதெமியின் உறுப்பினர் கௌரவம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Tamejiro Hiyama, Organofluorine Compounds: Chemistry and Applications. NY: Springer-Verlag GmbH, 2000.
- ↑ 野崎一(のざき ひとし)とは - コトバンク
- ↑ "ノーベル賞日本人受賞者7人の偉業【野依 良治】". Archived from the original on 2016-09-05. பார்க்கப்பட்ட நாள் 2017-05-23.