இட்ரோசீரைட்டு
இட்ரோசீரைட்டு (Yttrocerite) என்பது CaF2+(Y,Ce)F3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு புளோரைட்டு வகைக் கனிமமாகும். நீலச்சிவப்பு நிறத்தில் சம அளவு படிகங்களாக இக்கனிமம் காணப்படுகிறது. இட்ரியமும் சீரியமும் கலந்து காணப்படுவதால் கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. சுவீடன், நார்வே, ஐக்கிய அமெரிக்காவின் பல மாநிலங்களில் இட்ரோசீரைட்டு கிடைக்கிறது [1]. அனைத்துலக கனிமவியல் சமூகம் இட்ரோசீரைட்டை ஒரு கனிமமாக இதுவரை அங்கீகரிக்கவில்லை [2].
இட்ரோசீரைட்டு Yttrocerite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | கனிம வகை |
வேதி வாய்பாடு | CaF2 + (Y,Ce)F3 |
இனங்காணல் | |
படிக இயல்பு | கனசதுரப் படிகங்கள் |
மோவின் அளவுகோல் வலிமை | 4-5 |
மேற்கோள்கள்
தொகு- Marie-Nicolas Bouillet, Dictionnaire universel des sciences, des lettres et des arts, 1896. .