இணக்க முடிவு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பார்க்க: விக்கிப்பீடியா:இணக்க முடிவு
இணக்க முடிவு என்பது ஒரு குழு முடிவெடுக்கும் முறை. ஒரு குழுவின் அனைத்து அல்லது பலரின் இணக்கத்தோடு எடுக்கப்படும் முடிவே இணக்க முடிவு ஆகும். இம் முறையை தேர்தல் முடிவு, தனியொருவர் முடிவு ஆகியவற்றுடன் ஒப்பிட்டு வேறுபாட்டை வரையறுக்கலாம்.
இணக்க முடிவு வழிமுறை
தொகு- முடிவு எடுக்கப்படவேண்டிய ஒரு கருத்தை அல்லது சிக்கலை விவரித்தல்.
- எடுக்கப்படக் கூடிய அனைத்து முடிவுகளையும் அலசுதல்.
- அனைவருடைய பார்வைகளும் கருத்துகளும் இயன்றவரை முன்வைக்கப்படுதலையும் கேட்கப்படுதலையும் உறுதிசெய்தல்.
- ஒவ்வொரு முடிவின் நன்மை தீமைகளையும் அல்லது வரவு செலவுகளையும் ஆராய்ந்து, மறுப்புகள் மாற்றுக் கருத்த்க்கள் இருந்தால் திருத்தி சிறந்த முடிவுகளைத் தெரிவு செய்தல்.
- பாரிய எதிர்ப்பு அல்லது மறுப்புகள் இல்லாவிட்டால் ஒத்துழைப்பைக் கோருதல்.
- இணக்கத்தை உறுதிப்படுத்தல்.
இணக்க முடிவு நோக்கி விமர்சனங்கள்
தொகு- சிறுபான்மை ஒத்துப்போகாதோரால் அல்லது தனிநபர்களால் கூட பெரும்பான்மையினரின் முயற்சிகள் தடைப்பட்டு போகக்கூடிய சாத்தியக்கூறு.
- இணக்க முடிவுக்கு அதிக நேரம் தேவைப்படுவதால் அதிக நேரம் செலவழிக்க கூடியவர்களே பங்களிக்ககூடியதா இருக்கும். இது ஜனநாய போக்குக்கு சார்பான செயற்பாடு அல்ல.
- ஒத்துப்போகவேண்டும் என்ற போக்கு இருப்பதால் கருத்து வேறுபாடுகள் ஆரோக்கியமான விமர்சனங்கள் தடைப்படக்கூடிய சாத்தியக்கூறு.
- இணக்க முடிவு வழிமுறை சிறுபான்மைக் கருத்துக்கள் நீண்டகாலமாக பெரும்பான்மையினரின் செயற்திட்டங்களை இழுப்பறி செய்ய வழி செய்கின்றது.