இணையடிப் பன்முகி

வடிவவியலில் இணையடிப் பன்முகி (prismatoid) என்பது தனது அனைத்து உச்சிகளையும் இரு இணை தளங்களில் அமைந்திருக்கக் கொண்ட ஒரு பன்முகி. இதன் பக்கவாட்டு முகங்கள் சரிவங்களாகவோ, முக்கோணங்களாகவோ இருக்கலாம்.[1] இரண்டு இணை தளங்களிலும் அமைந்திருக்கும் உச்சிகளின் எண்ணிக்கை சமமாகவும், பக்கவாட்டு முகங்கள் இணைகரங்களாகவோ அல்லது சரிவகங்களாகவோ இருக்குமானால் அந்த இணையடிப் பன்முகியானது பட்டகமாக இருக்கும்.[2]

இணையடிப் பன்முகியின் இணை அடிப்பக்க முகங்கள் A₁, A₃, நடுவழிக் குறுக்குவெட்டு A₂, உயரம் h

கன அளவு தொகு

இரு இணை அடிப்பக்க முகங்களின் பரப்பளவு A1, A3; இரு இணை அடிப்பக்கங்களுக்கும் நடுவிலுள்ள ஒரு தளத்தால் இப்பன்முகி வெட்டப்படும்போது கிடைக்கும் குறுக்குவெட்டின் பரப்பளவு A2; இரு இணை அடிப்பக்கங்களுக்கு இடைப்பட்ட தூரம், அதாவது பன்முகியின் உயரம் h எனில் இணையடிப் பன்முகியின் கனவளவு:[3]

 

மேற்கோள்கள் தொகு

  1. William F. Kern, James R Bland, Solid Mensuration with proofs, 1938, p.75
  2. Claudi Alsina, Roger B. Nelsen: A Mathematical Space Odyssey: Solid Geometry in the 21st Century. The Mathematical Association of America, 2015, ISBN 9780883853580, pp. 85-89
  3. B. E. Meserve, R. E. Pingry: Some Notes on the Prismoidal Formula. The Mathematics Teacher, Vol. 45, No. 4 (April 1952), pp. 257-263

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இணையடிப்_பன்முகி&oldid=3390474" இலிருந்து மீள்விக்கப்பட்டது