இணைய ஆபாசம்

இணையத்தில் அணுகக்கூடிய எந்த ஆபாசத்தையும்

ஆபாச இணையம் அல்லது இணைய பாலுணர்வுக் கிளர்ச்சியம் (Internet pornography) என்பது இணையத்தில் வலைத்தளம் மூலம் வெளியாகும் ஆபாச படங்களை குறிக்கும் சொல் ஆகும். இது 1990 களின் பிற்பகுதியில் உலகளாவில் பரவலான பொது அணுகல் இணைய ஆபாசத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

கடந்த சில தசாப்தங்களாக ஆபாசப் பார்வையில் ஒரு பெரிய முன்னேற்றம் என்று 2015 ஆம் ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது 1970 களில் பிறந்தவர்களுக்கும் 1980 களில் பிறந்தவர்களுக்கும் இடையில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 1980 களில் பிறந்தவர்கள் இளம் வயதிலேயே இணைய அனுபவத்துடன் உலகில் முதன்முதலில் வளர்ந்தவர்கள் என்பதனால் இவர்கள் மத்தியில் இணைய ஆபாச தேடல் அதிகரித்து இருக்கலாம் என கருதப்படுகின்றது.

2018 ஆம் ஆண்டு நிலவரப்படி 'மைண்ட்ஜீக்' என்ற ஒற்றை நிறுவனம் பல பிரபலமான ஆபாச வலைத்தளங்களை கொண்டுள்ளது,[1] இதில் காணொளி பகிர்வு சேவைகாளான 'ரெட் டியூப்' மற்றும் 'பார்ன்ஹப்' போன்ற வலைத்தளங்கள் அத்துடன் வயதுவந்த திரைப்பட தயாரிப்பாளர்களான 'பிரேசர்ஸ்', 'டிஜிட்டல் பிலேகிரவுண்ட்', 'மென்.காம்', 'ரியாலிட்டி கிங்ஸ்' மற்றும் 'சீன் கோடி' உள்ளிட்டவை அடங்கும்.[2]

வரலாறு மற்றும் விநியோக முறைகள் தொகு

பாலுணர்வுக் கிளர்ச்சியம் இணையம் வருவதற்கு முன்பு நிகழ்படக்கருவி, காணொளி பதிவு மற்றும் கம்பி வடத் தொலைக்காட்சி போன்றவற்றில் வெளியானது.[3]

ஆண் மற்றும் பெண் பார்வையாளர்கள் தொகு

2011 நிலவரப்படி நிகழ்நிலையில் ஆபாசத்தைப் பார்ப்பவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் ஆவார். அவர்கள் பெரும்பாலும் பெண்கள் காதல் நாவல்கள் மற்றும் சிற்றின்ப ரசிகர் புனைகதைகளை விரும்புகிறார்கள். பிரபலமான ஆபாச வலைத்தளங்களுக்கான பார்வையாளர்களில் கால் பகுதியிலிருந்து மூன்றில் ஒரு பங்கை பெண்கள் கொண்டிருந்தனர், ஆனால் தளங்களை செலுத்த சந்தாதாரர்களில் 2% மட்டுமே பெண்கள் இருந்தனர்.[4]

சட்ட ரீதியான தகுதி தொகு

இணையம் ஒரு சர்வதேச வலைப்பின்னல் ஆகும். மற்றும் ஆபாசத்தை கட்டுப்படுத்தும் சர்வதேச சட்டங்கள் எதுவும் இல்லை, ஒவ்வொரு நாடும் இணைய ஆபாசத்தை வித்தியாசமாக கையாள்கின்றன. பல நாடுகளின் குழந்தைகளை வைத்து ஆபாச படம் தயாரிப்பது மிகப்பெரிய குற்றம் ஆகும்.

இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு முதல் பல ஆபாச இணையத் தளங்களை தடை செய்யப்பட்டது. 2015 இல் 857 தளங்கள் தடை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இந்திய அரசு ஆபாச இணையதளங்கள் பார்வை இடுவது குற்றமாக அறிவித்தது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைய_ஆபாசம்&oldid=3152205" இருந்து மீள்விக்கப்பட்டது