இணைய பெட்டகம்

இணைய பெட்டகம் (DigiLocker) என்பது இந்திய அரசால் மக்களுக்கு பிப்ரவரி 2015 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் ஒரு சேவை ஆகும். ஒரு தனிப்பட்ட இந்திய குடிமக்கள் தன்னிடம் உள்ள ஆதார் எண் மூலம் இந்த சேவையை பயன்படுத்த இயலும். சான்றிதழ்களை மின்வருடி மூலம் வருடி சான்றிதழாக மாற்றி இந்த இணைய பெட்டகத்தில் மின் கோப்புகளாக சேமிக்கலாம். அணைத்து பதிவேற்றப்பட்ட கோப்புகளுக்கும் சமவளஇனங்காட்டிஒன்று மூலம் தனிபடுத்தப்பட்டு[1]சேமிக்கபடும். இணையகையொப்பம் தொழில்நுட்பம் இந்த இணைய பெட்டகத்தில் இருக்கும் கோப்புகளை கையொப்பம் இட பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்ய ஆதார் எண் அவசியம்.

பதிவு செய்யும் முறை மற்றும் செயல்பாடு தொகு

இணைய பெட்டகத்தில் பதிவு செய்ய இதன் இணைய தலத்தில் இருக்கும் பதிவு செய் என்னும் பொத்தானை அழுத்தினால் ஒரு உரைபெட்டி தோன்றும் அதில் உங்கள் ஆதார் என்னை உள்ளிடவும். அதன் பின் நம் ஆதார் என்னுடன் தொடர்புடைய கைபேசி எண்ணுக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்த படும் கடவுச்சொல் குறுஞ்செய்தியாக வந்தடையும்( 30 நிமிடம் மட்டும் ஏற்புடையது ) .[2] அதனை கொடுக்கபட்டுள்ள உரைபெட்டியில் உள்ளிட்டால். அதன்பிறகு ஒரு பயனர் பெயரையும் கடவுசொல்லை நாம் உள்ளிட்டு பெட்டகத்தை பயன்படுத்தலாம் . இவை அனைத்தும் முடிந்து நாம் இணையபெட்டகத்தில் நமது சுயவிவரப் பக்கத்திற்கு சென்றால் ஆதார் தரவுத்தளத்தில் இருந்து நமது புகைப்படம் ,பெயர் ,முகவரி ,மற்றும் பல தகவல்கள் இங்கு பகிரப்பட்டு உள்ளதை காணலாம் . தற்போது இந்த பெட்டகத்தில் சுமார் 10 மெகாபைட் அளவிற்கு கோப்புகளை பதிவேற்றம் செய்ய முடியும் விரைவில் 1000 மெகாபைட் ஆக தரமுயர்த்தப் படவுள்ளது

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைய_பெட்டகம்&oldid=2591901" இலிருந்து மீள்விக்கப்பட்டது