இணை அறுவடை இயந்திரம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இணை அறுவடை இயந்திரம் என்பது அறுவடை, கதிர் அடித்தல், உமி நீக்கல் ஆகிய எல்லா செயல்களையும் ஒருங்கே செய்யக்கூடிய ஒரு வேளாண் இயந்திரம் ஆகும். முந்திய காலத்தில் மனிதர்களே இந்த செயற்பாடுகளில் உழைப்பு செலுத்த வேண்டி இருந்தது. அதன் பின்னர் அறுவடை இயந்திரம் (binder), கதிரடி இயந்திரம், உமி நீக்கி போன்ற இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. பின்னர் இவை எல்லாவற்றையும் ஒருங்கே செய்யும் இணை அறுவடை இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தது. இவ்வியந்திரங்கள் பெரும்பாலும் மேற்குநாடுகளிலும், கம்பனி வயல்களிலும் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இவை மிகவும் விலை உயர்ந்தவை ஆகும்.