இணை உட்செலுத்தல்
இணை உட்செலுத்தல் (coinjection) என்பது ஒரு பல்லுறுப்பி துளைத் தொழில்நுட்பமாகும், இதில் வெவ்வேறு பல்லுறுப்பிகள் ஒரே வார்ப்புக்குள் துளை மூலம் செலுத்தப்படுகின்றன.
இணை உட்செலுத்தல் பயன்படுத்துவதற்கான காரணங்கள்:
- ஒரு பொருளின் உள்ளே மலிவான நிரப்பு பொருள் பயன்படுத்துவதால் செலவு குறைகிறது.
- பாலிமர்களின் மூலம் விரும்பக்கூடிய பண்புகளை இணைத்தல்
- வண்ணம் (கார் பின் புற விளக்குகளில் வேறுபட்ட வண்ண பாகங்கள்),
- உணர்வு (மென்மையான- பல் துலக்கிகள்) அல்லது இயக்கமுறை பண்புகளை மாற்றுதல்
- பொருளின் அடர்த்தி மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை மாற்றுவதன் மூலம் தண்ணீரில் மிதக்கும் அல்லது அதிர்ச்சியை தாக்குபிடிக்கும் தன்மையைப் பெறுகிறது.
இந்த அனுகூலங்கள் இருந்த போதிலும், இணையுட்செலுத்தல் இயந்திரமானது, நிலையான ஒற்றைத் துளை இயந்திரங்களை விட பராமரிக்க கடினமாகவும், மிகவும் விலை உயர்ந்ததாகவும் உள்ளது. மேலும் சிக்கலான வடிவங்களுடன உள்ளதால், இதன் செயல்முறையும் கடினமாக உள்ளது.
உசாத்துணைகள்
தொகு- "What's Behind the Chrome Plate? Coinjection & Gas-Assist Molding". Plastic Technology. Archived from the original on 2005-09-07. பார்க்கப்பட்ட நாள் 2005-08-31.
- "Coinjection's New Look: Two Screws, One Barrel". Plastic Technology. Archived from the original on 2005-12-27. பார்க்கப்பட்ட நாள் 2005-08-31.