நாடித் துடிப்பு

(இதயத் துடிப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நாடித் துடிப்பு என்பது இதயம் துடிப்பதால் நாடிகளில் ஏற்படும் தொட்டுணர்வு மூலம் அறியக்கூடிய துடிப்பைக் குறிக்கின்றது. இது பெரும்பானமையான சந்தர்ப்பங்களில் இதயத்துடிப்பு வீதத்துக்குச் சமனானதாகும். நாடித்துடிப்பு நிமிடத்துக்கு எத்தனை என உடலின் சில பகுதிகளில் மட்டுமே தொட்டு உணரப்படக்கூடியது. இதயத் துடிப்பு நேரடியாக இதயத் துடிப்புமானி மூலம் கேட்டறியப்படுகின்றது. இதயத்துடிப்பு என்பது நிமிடத்துக்கு இதயம் எத்தனை தடவை துடிக்கிறது என்பதன் அளவு ஆகும். சராசரியாக வளர்ந்த நபரின் இதயத் துடிப்பு 70 - 80 துடிப்பு/நிமிடம் ஆக இருக்கும். பொதுவாக, வளர்ந்தோரில் 60 தொடக்கம் 100 வரை இயல்பான துடிப்பு எனக் கருதப்படுகின்றது.[1] நாடித் துடிப்பு இதற்கு மிகையாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் உடல் நலக் கேட்டிற்கான அறிகுறி எனத் தெரிந்து கொள்ளலாம். எனவே நாடித்துடிப்பு ஒரு உயிராதார அறிகுறி ஆகும்.

நாடித் துடிப்பு

உடலின் மேற்பகுதியில் நாடி அமைந்துள்ள இடங்களில் மட்டுமே நாடித்துடிப்பு தொட்டுணரப்படமுடியும். இவ்விடங்களில் நாடியை அதன் கீழ் உள்ள அமைப்புடன் (பொதுவாக எலும்பு) விரல் மூலம் சிறிது அழுத்துவதால் நாடித்துடிப்பு அறியப்படுகின்றது. கை மணிக்கட்டு, முழங்காலின் பிற்பகுதி, கழுத்து, முழங்கை உட்பகுதி குதிக்கால் மேற்பகுதி, பாதத்தின் ஒரு பகுதி என்பன நாடித்துடிப்பு அறியக்கூடிய இடங்களாகும்.

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடித்_துடிப்பு&oldid=3494412" இலிருந்து மீள்விக்கப்பட்டது