இதய வெளியேற்றவளவு

இதய வெளியேற்றவளவு (இ.வெ) அல்லது இதய வெளியேற்றக் கொள்ளளவு என்பது ஒருநிமிடத்தில் இதயத்தால் வெளியேற்றப்படுகின்ற குருதியின் கொள்ளளவு ஆகும். இது வெவ்வேறு முறைகளில் அளக்கப்படுகிறது, எ.கா: இலீட்டர்/நிமிடம். இதய வெளியேற்றக் கொள்ளளவானது இடது, வலது கீழ் இதயவறைகளினால் இதயச் சுருக்கத்தின் போது வெளியற்றப்படும் குருதியின் மொத்தக் கொள்ளளவு ஆகும், இதய வெளியேற்றவளவு சராசரியாக ஓய்வான நிலையில் உள்ள ஒரு ஆணில் 5.6 இலீ./நிமி. மற்றும் பெண்ணில் 4.9 இலீ./நிமி. ஆகும். பொதுவாக இதய வெளியேற்றவளவு நிமிடத்துக்கு ஐந்து இலீட்டர் ஆகக் கருதப்படுகிறது.[1] துடிப்புக்கொள்ளளவினதும் இதயத்துடிப்பு வீதத்தினதும் பெருக்கம் இதய வெளியேற்றவளவைத் தரும்.

இ.வெ = துடிப்புக்கொள்ளளவு X இதயத்துடிப்பு வீதம்

மேற்கோள்கள்

தொகு
  1. Guyton, Arthur C.; John E. (John Edward) (2006). Textbook Of Medical Physiology (11th ed.). Philadelphia: Elsevier Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7216-0240-1.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதய_வெளியேற்றவளவு&oldid=3581681" இலிருந்து மீள்விக்கப்பட்டது