இதழமைவு (தாவரவியல்)
இதழமைவு (Aestivation - botany) என்பது மலர் மலர்வதற்கு முன்உள்ள மொட்டு நிலையில் மலரின் பாகங்களின் அமைப்பு நிலைகளை குறிப்பதாகும். சில சமயங்களில் இதழமைவினை பிரஃபோலியேஷன் அல்லது பிரிஃபோலியேஷன் எனவும் குறிப்பிடலாம். ஆனால் இவ்வார்த்தைக்கு இதழமைப்பு எனவும் அர்த்தம் கொள்ளலாம்: அதாவது தண்டு மொட்டுக்களில் இலைகள் அமைந்துள்ள அமைப்பைக் குறிப்பதாகும்.
தாவர வகைப்பாட்டியலில் தாவரங்களை இனம் காணும்போது இதழமைவு முதன்மை பங்காற்றுகிறது; எடுத்துக்காட்டாக, மால்வேசி குடும்ப மலர் மொட்டுக்களில், தவிர, மால்வேசிக் குடும்பத்தில்புல்லி இதழ்கள் தொடு இதழமைவு கொண்டுள்ளன; இருப்பினும் மால்வேசிக் குடும்பத்தில் ஃபெர்மாண்டோடென்ட்ரான், கைராந்தோடென்ட்ரான் போன்ற பேரினங்கள் தவறி வைக்கப்பட்டுள்ளன.
கலைச் சொற்கள்
தொகுஇதழமைவு என்ற ஒரே வார்த்தையை, தாவரங்களில் இலைகளின்அமைவிற்கும் பயன்படுத்தப்படுகிறது. [1] இதழமைவின் வகைகளை உள்ளடக்கியது:
- தழுவிதழ் – ஒன்றுடன் ஒன்று தழுவி அமைந்தது
- ஒழுங்கற்ற திருகு அல்லது திருகமைவு – ஒவ்வொரு அல்லி இதழ் அல்லது புல்லி இதழின் ஒரு முனை, பக்கத்திலுள்ள இதழின் ஒரு முனைக்கு வெளிப்புறமாகவும், மற்றொரு முனை பக்கத்திலுள்ள இதழின் மறுமுனைக்கு உட்புறமாகவும் அமைந்தது.
- அகல் சுழலிதழ்(காக்லியேட்) – சுருள் வடிவில் திருகி அமைந்தது
- சுழல் மடிப்பிதழ்(கன்டார்டிபிளிகேட்) – முறுக்கிய மேலும் மடிப்புள்ளதாக அமைந்தது
- ஐங்கவையிதழ்(குவின்கன்ஸியல்) – ஐந்து இதழ்களில், இரண்டு அல்லி இதழ்கள் அல்லது புல்லி இதழ்கள் மற்ற எல்லாவற்றிற்கும் வெளியே உள்ளன, அடுத்த இரண்டு இதழ்கள் எல்லாவற்றிற்கும் உள்ளே உள்ளன, மற்றும் ஐந்தாவது இதழின் ஒரு விளிம்பு வெளிப்புறமாகவும் மற்றொரு விளிம்பு உட்புறமாகவும் அமைந்துள்ளது
- ஒழுங்கற்ற திருகு அல்லது திருகமைவு – ஒவ்வொரு அல்லி இதழ் அல்லது புல்லி இதழின் ஒரு முனை, பக்கத்திலுள்ள இதழின் ஒரு முனைக்கு வெளிப்புறமாகவும், மற்றொரு முனை பக்கத்திலுள்ள இதழின் மறுமுனைக்கு உட்புறமாகவும் அமைந்தது.
- ஒழுங்கற்ற சுழல் இதழ்
- குறுக்கு மறுக்கு இதழ்
- உள் மடிந்த இதழ் – உள் புறமாக மடிந்து அமைந்தது
- திறந்த இதழ் – அல்லி இதழ்கள் அல்லது புல்லி இதழ்கள் ஒன்றுடன் ஒன்று தழுவாத அல்லது ஒன்றுக்கொன்று தொடாமலும் அமைந்தது
- மறுஇரட்டித்தல் – வெளிப்புறமாக மடிந்து அமைந்தது
- தொடு இதழ் – அடுத்தடுத்த அல்லி இதழ்கள் அல்லது புல்லி இதழ்கள் இதழ்கள் ஒன்றையொன்று தழுவாமல் தொட்டுக் கொண்டிருக்கும்.
-
Lilac (Syringa vulgaris), தொடும் இதழமைவு
-
Phlox (Phlox paniculata) ஒழுங்கற்ற சுழல் இதழமைவு
-
Vinca minor, ஒழுங்கற்ற சுழல் இதழமைவு
-
Ipomoea, சுழல் மடிப்பு இதழமைவு
-
(Merremia tuberosa), மொட்டில் அல்லிவட்ட சுழல் மடிப்பு இதழமைவு.