இதென்ன மூட்டை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இதென்ன மூட்டை என்பது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு. தமிழகத்தில் நாட்டுப்புறச் சிறுவர் சிறுமியர் இதனை விளையாடுவர். பெரியவர்கள் வேடிக்கைப் பார்த்து மகிழ்வர். பொதுவாக நிலாவெளிச்சத்தில் இது விளையாடப்படும். இதுபோன்ற விளையாட்டுகள் 1950-க்குப் பிறகு மறைந்துகொண்டே வருகின்றன.
பட்டவரின் கண்ணைக் கட்டிப் படுக்க வைப்பர். மற்றவர்கள் ஏதோ பேசி அவரை எழுப்ப வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் எழுப்ப முடியாவிட்டால், பட்டவர் வென்றவர் ஆவார்.
மேலும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- தேவநேயப் பாவாணர், ஞா, தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவசிர்ராந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1954