இத்தி மரம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இத்தி மரம் (Ficus tinctoria)என்பது ஆல் வகுப்பைச் சேர்ந்த ஒரு அத்திமர வகையாகும். இது கல்அத்தி அல்லது காட்டத்தி எனப்படுகிறது. இது பகுதித் தொற்றிவளர் தாவரமாகும். பெரும்பாலும் இது மற்ற மரங்களைச் சுற்றியோ, பாறை அல்லது சுவர்களின் இடுக்குகளிலோ வளரும். இதன் மரப்பட்டை பழுப்பு அல்லது மஞ்சள் கலந்த பச்சை நிறமாகக் காணப்படும். இலையின் ஒரு பாதி பெரியதாயும், அதன் அடிபாகம் கடின மயிரிழையுடையதாயும் இருக்கும். கல்இத்தி அல்லது கல்அத்திவகைத் தாவரம் மற்ற மரங்களின், குறிப்பாக பனைமரத்தை மீது மீது தொற்றி வளரும். இதன் தாவரப் பெயர் ஃபீக்கசு டிங்டோரியா து.சி.பேரசைட்டிக்கா என்பதாகும். இது மருத்துவத்திற்கும் சாயத்திற்கும் பயன்படுகிறது. இதன் பிற தமிழ்ப் பெயர்கள் இந்திரி, இறலி, சுவி, இறாடகம், காட்டத்தி என்பனவாகும். இம்மரம் இந்தியாவில் பீகார், அசாம், அந்தமான், தென்னிந்தியப் பகுதிகளில் வளர்கின்றது. இம்மரத்தின் பட்டை, பிஞ்சு, காய் முதலியன மருந்தாகப் பயன்படுகின்றன
மருத்துவக் குணங்கள்
தொகுஇது துவர்ப்புச் சுவை உடையது. வெப்பத் தன்மயுடைய இது துவர்ப்பி எனப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு1. க.ச. முருகேச முதலியார் - குணபாடம் மூலிகை வகுப்பு - தமிழக அரசு வெளியீடு, சென்னை. @ 1969.
2. K.R. Kirtikar, and, B.D. Basu. - Indian Medicinal Plants - M/s. Bishen Singh Mahendra Pal Singh, Deradun. @ 1935.
3. R.N. Chopra, S.L. Nayar, and, I.C. Chopra - Glossary of Indian Medicinal Plants - C.S.I.R., New Delhi. @ 1956.
4. J.S. Gamble - Flora of the Presidency of Madras - Botanical Survey of India, Calcutta. @ 1957.