இந்தியக் கடற்படை அறிவியல் தொழில்நுட்பவியல் ஆய்வகம்
இந்தியக் கடற்படை அறிவியல் தொழில்நுட்பவியல் ஆய்வகம் (Naval Science and Technological Laboratory)) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டி. ஆர். டீ. ஓ) கீழ் செயல்படும் ஒரு ஆய்வகமாகும். இந்த ஆய்வகம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் விசாகப் பட்டினத்தில் அமைந்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளைக் கணக்கில் கொண்டு இந்த ஆராய்ச்சி ஆய்வகம் இந்தியக் கப்பற்படையின் தேவைகளுக்கு ஏற்றவாறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, தண்ணீருக்கு அடியில் இருந்து செயல்படும் ஆயுதங்களையும் இது போன்ற இதர போர்க்கருவிகளையும் தயாரித்து, அதன் தரத்திற்கு உத்தரவாதமளிப்பதுடன், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற வாகனங்களுக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கி வருகிறது. இந்தியக் அறிவியல் தொழில்நுட்பவியல் ஆய்வகம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் கீழ் அமைந்துள்ள கப்பற்படை ஆராய்ச்சி மேம்பாட்டு இயக்குநரகத்தின் கீழ் செயல்படுகிறது. தற்பொழுது இதன் இயக்குனராக டாக்டர் ஜே. புஜங்க ராவ் செயல்படுகிறார்.[1]
வரலாறு
தொகு1960 ஆம் ஆண்டில், ஆகஸ்ட் 20 அன்று இந்தியக் கப்பற்படையின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இந்தியக் இந்தியக் கடற்படை அறிவியல் தொழில்நுட்பவியல் ஆய்வகம் நிறுவப்பெற்றது. இந்த ஆய்வகம் இந்தியக் கடற்படைக்குத் தேவையான நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து இயக்கும் கருவிகளையும் ஆயுதங்களையும் தயாரித்து வழங்கி வருகிறது. இது போன்ற தொழில் நுட்பங்களில் இந்தியா தன்னிறைவு அடைவதற்கு ஏதுவாக இந்த ஆய்வகம் செயல்பட்டு வருகிறது.
நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து இயக்கவல்ல ஆயுதங்களையும் கருவிகளையும் வடிவமைப்பது, அதை மேம்படுத்தி பரிசோதனைகள் செய்வது, அதன் செயல்பாட்டை மதிப்பிடுவது, பிறகு அது போன்ற கருவிகளை தயாரித்து வழங்குவது ஆகியவற்றை இந்த ஆய்வகம் மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த ஆயுதங்களை செயல்படுத்துவதுடன் அவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கும் தேவையான தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதும் இதன் கடமையாகும். நீர்மூழ்கிக் குண்டுகள் (torpedoes), மிதிவெடிகள் (mines), தூண்டில் பொறிகள் (decoys), இலக்குகளைப் பாதுகாத்தல் (targets), போலி உருவாக்கிகள் (simulators), ஆகியவற்றுடன் தீயணைப்பு முறைமை (Fire Control Systems), ஏவுகணைகளை ஏவுதல் (weapon launchers) ஆகிய செயல்பாடுகளை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும் நடைமேடைகளையும் (platforms), அவற்றின் மேற்பரப்பின் தரத்தையும் அடிக்கடி உறுதி செய்து கொள்ள வேண்டும். அவை பாழடைந்து இருந்தால், அவற்றை பழுது பார்த்து சரி செய்ய வேண்டும். புதிய பொருட்களை பயன்படுத்தும் பொழுது அதை வடிவமைப்பதும், அதன் தாங்கும் ஆற்றலை அடிக்கடி பரிசோதனை மூலம் உறுதி செய்வதும் அவர்களுடைய கடமையாகும். காலத்திர்கேற்ற புதிய போர் முறை யுக்திகள், புதிய வடிவமைப்புடன் கூடிய நிலைத்து நிற்கக் கூடிய நடைமேடை மற்றும் இதர பாகங்களை அறிமுகப் படுத்த வேண்டும். மறைவிடத்தில் இருந்து தாக்குதல், மறைமுகத் தாக்குதல் ஆகிய முறைகளுக்கு ஏற்றவாறு வடிவமைத்து அவற்றின் நம்பகத் தன்மையை அடிக்கடி பரிசோதனை செய்து உறுதிப் படுத்த வேண்டும். இதற்கு வழிவகுக்கும் புதிய முறைகள், பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்தி திறமையாக ஏவுகணைகளை செலுத்துதல், குண்டுகளை எறிதல் ஆகியவற்றிற்கான எளிதான வழிமுறைகளை வகுத்து அதற்கான பயிர்ச்சிகளையும் வழங்க வேண்டும்.
ஐ எசு ஒ 9001:2000 ஆய்வகம்
தொகுஇந்தியக் கடற்படை அறிவியல் தொழில்நுட்பவியல் ஆய்வகம் ஐ ஏசு ஒ 9001:2000 தர நிர்ணயம் கொண்ட ஆய்வகம் ஆகும். இந்த ஆய்வகத்தில் மிகவும் நவீனமான ஆய்வுகள் புரிவதற்கான இயந்திரங்களும், சோதனைக் கருவிகளும் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு