இந்தியக் கருஞ்சாம்பல் கரிச்சான்
இந்தியக் கருஞ்சாம்பல் கரிச்சான் (அறிவியல் பெயர்: Dicrurus leucophaeus longicaudatus) என்பது கருஞ்சாம்பல் கரிச்சானின் துணையினம் ஆகும்.[1]
விளக்கம்
தொகுஇந்தியக் கருஞ்சாம்பல் கரிச்சானானது கருங்குரிச்சான் அளவில் இருக்கும். இது நீண்ட வால் கொண்டது. இதன் மேல் தோற்றம் பளபளப்பான சிலேட் கருப்பாக இருக்கும். உடலின் அடிப்பகுதி சற்று மங்கிப் பளபளப்பின்றி இருக்கும். விழிப்படலம் ஆழ்ந்த சிவப்பாகவும், கால்களும் அலகும் கொம்பு நிறமான கறுப்பாக இருக்கும்.[2]
பரவலும் வாழிடமும்
தொகுஇந்தியக் கருஞ்சாம்பல் கரிச்சான் இமயமலைப் பகுதியில் இருந்து குளிர்காலத்தில் தென்னிந்தியாவுக்கு வலசை வருகிறது. வலசை வரும் இது பசுங்காடுகளிலும், இலையுதிர் காடுகளிலும் காணப்படும். இது மரங்களடர்ந்த காடுகளில் திரியக்கூடியது. காபி, தேயிலைத் தோட்டங்களிலும் காணப்படும். மலைகளில் 1500 மீட்டர் உயரம் வரைக் காணப்படும்.
நடத்தை
தொகுஇந்தியக் கருஞ்சாம்பல் கரிச்சான் மலை நேரங்களில் மரங்களின் உச்சியில் அமர்ந்து பாய்ந்து பறந்து ஈப்பிடிப்பானைப் போலப் பறக்கும் பூச்சிகளைப் பிடித்து உண்ணும். கரையான் புற்றுகளில் ஈசல்கள் வெளிவரும்போது இருபது பறவைகள் வரை கூட்டமாக திரளும். காப்பி தோட்டங்களில் முள்முருக்கு மலரும்போது அதில் வந்து தேனினை உண்ணும்.[2]
வைவது போல கத்தினாலும் கிலி...லீ- லீ- லீ என அணில் போலக் குரல் கொடுப்பதையும் கேட்க இயலும்.[2]