இந்தியத் திட்ட உணவுக் கழகம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இந்திய உணவுக் கழகம் (Indian Dietetic Association) என்பது இந்தியரின் சுகாதார மேம்பாட்டினைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
இந்திய உணவுக் கழகம் 1962ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது உணவூட்ட வல்லுநர்கள், மருத்துவ விஞ்ஞானிகள் ஆகியோரை உள்ளடக்கியது. இந்நிறுவனம் கொல்கத்தாவினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றது. பன்னாட்டு உணவு கட்டுப்பாட்டு அமைப்பு இதனை 1975ஆம் ஆண்டு அங்கீகரித்து. இதன் மாநாடு 2012ஆம் ஆண்டு ஐதராபாத்தில் நடைபெற்றது.
- ஊட்டச்சத்து, உணவு விதிமுறை ஆகியன தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்குவித்தல்.
- சமூக, அறிவியல் மற்றும் உறுப்பினர்களிடையே நல்லெண்ணத்தை வளர்ப்பதை எளிதாக்குதல்.
- வெவ்வேறு நபர்களிடையே நெருங்கிய தொடர்பு மற்றும் தொடர்புகளை ஊக்குவித்தல் மற்றும் ஒரு பரந்த கண்ணோட்டத்தை உருவாக்கவும், சமூகத்தின் நலனுக்காக அறிவியல் அறிவை ஒருங்கிணைக்கவும் உதவுகிறது.
- திட்ட உணவு வல்லுநரின் நலத்தைக் காப்பது.
குறிக்கோள்கள்
தொகுஊட்டச்சத்து, திட்ட உணவு தொடர்பான ஆராய்ச்சி, பணிகளை மேம்படுத்துவதும், அறிவியல் இதழ்களை வெளியிடுவதும், திட்ட உணவு வல்லுநர்கள் தொடர்பான தேர்வுகளை நடத்துவதும், சிறப்புப் பேரவைகளை வருடத்திற்கு ஒருமுறை கூட்டுவதும் இந்தியத் திட்ட உணவுக் கழக உறுப்பினர்களின் நலத்தைக் காப்பதும், அயல்நாட்டில் உள்ள திட்ட உணவுக் கழகங்களுடன் இணைந்து செயல்படுவதும் இந்திய உணவுத் திட்டக் கழகத்தின் குறிக்கோள்கள் ஆகும்.
செயல்பாடுகள்
தொகு- புகழ்வாய்ந்த அறிவியல் அறிஞர்கள் மூலம் கருத்தரங்குகள் அமைப்பது.
- சிறப்பு பேரவைகள் ஊட்டச்சத்து, திட்டஉணவு குறித்த அறிவைப் பரப்பும் மன்றங்களாகச் செயல்படுவது.
- ஊட்டச்சத்துக் கல்வியின் எல்லைகளை விரிவுபடுத்துவது.
- ஊட்டச்சத்துக் குறைவைப் போக்குவது.
- கல்வியின் அனைத்து நிலைகளிலும் ஊட்டச்சத்துக் கல்வியை அமைப்பது.
- திட்டஉணவு குறித்த பாடத்திட்டம் அமைப்பது.[2]
மேற்கோள்
தொகு- ↑ "About Us". Indian Dietetic Association (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-19.
- ↑ சத்துணவியல்,மேல்நிலை இரண்டாம் ஆண்டு. மருத்துவமனையில் திட்ட உணவு அமைப்பு முறை: தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்,சென்னை. 2013.