இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) (Telecom Regulatory Authority of India (TRAI), இந்தியாவில் செயல்படும் அனைத்துத் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.[2]
சுருக்கம் | டிராய்/TRAI |
---|---|
உருவாக்கம் | 1997 |
சட்ட நிலை | தன்னாட்சி நிறுவனம் [1] |
நோக்கம் | தொலைத் தொடர்பு நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தல் |
தலைமையகம் | புதுதில்லி, இந்தியா |
சேவை பகுதி | இந்தியா |
முக்கிய நபர்கள் | தலைவர் 4 உறுப்பினர்கள் செயலாளர் |
வலைத்தளம் | www |
வரலாறு
தொகுஇந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையச் சட்டம், 1997இன் படி, இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவைகளையும், கட்டணங்களையும் ஒழுங்குபடுத்த, பிப்ரவரி 20, 1997ஆம் ஆண்டில் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தொடங்கப்பட்டது..
அமைப்பு
தொகுதொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் ஒரு தலைவரும், இரண்டு முழு நேர உறுப்பினர்களும், இரண்டு பகுதி நேர உறுப்பினர்களும் கொண்டுள்ளது. ஆணைய முடிவுகளைச் செயல்படுத்த ஒரு முழு நேர செயலர் தலைமையில் செயலகம் செயல்படுகிறது.
செயலகம்
தொகுடிராய் அமைப்பின் அன்றாட நிர்வாகம் ஒரு செயலாளரின் தலைமையில் நிர்வகிக்கப்படுகிறது. சிக்கலான நேரங்களின் தகுந்த ஆலோசகர்களின் யோசனைப்படி, செயலர் செயல்படுவார். மேலும் ஆணையக் கூட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரலை (அஜண்டா-Agenda) ஆணையத் தலைவரைக் கலந்து தயாரிப்பார். ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவார். .[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Telecom Regulatory Authority of India Act, 1997
- ↑ "TRAI website". பார்க்கப்பட்ட நாள் 2008-08-19.
- ↑ "TRAI Manual" (PDF).