இந்தியாவில் கடல் உற்பத்தி பொருள் ஏற்றுமதி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இந்தியாவின் பொருளாதாரத்தில் கடல் உற்பத்தி பொருள்களின் ஏற்றுமதி குறிப்பிட்டத்தக்கது.
ஏற்றுமதி
தொகுஇந்தியாவில் 1938-39ல் கடல் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி தொடங்கியது. உலர்ந்த, உப்பிட்ட, கடல் விலங்கு மற்றும் தாவரங்களின் உற்பத்தி பொருட்கள் ஆகியவை ஏற்றுமதி பொருட்களாகும்.ஹாங்காங், சிங்கப்பூர், பர்மா, மற்றும் இலங்கைக்கு அதிகமாக உலர்ந்த (அல்லது) காய்ந்த மீன்களை ஏற்றுமதி செய்கின்றனர். இந்த வருடத்தில் மட்டும் ரூ73.16 லட்சம் (21,874 டன்)க்கு ஏற்றுமதியாகியுள்ளது. இதே அளவு 1945-46ல் ரூ269 லட்சம் மதிப்பில் (32,283 டன்) ஏற்றுமதியாகியுள்ளது. 1959ல் இலங்கைக்கு மட்டும் இந்தியாவிலிருந்து ரூ 4.43 கோடிக்கு மதிப்பில் (25,932 டன்) ஏற்றுமதியாகியுள்ளது. அதன் பிறகு படிப்படியாக குறைந்தது. இந்தியாவிலிருந்து 22 நாடுகளுக்கு 1962ல் காய்ந்த இறால் 3067 டன் அதாவது ரூ89.43 லட்சத்துக்கு ஏற்றுமதியாகியுள்ளது. இதில் பாதி பர்மாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த வருடத்தில் இருந்து படிப்படியாக குறைந்தது இறால் ஏற்றுமதி. உலகிலேயே இந்தியா மீன் உற்பத்தியில் 8வது இடத்தில் உள்ளது. வருடத்துக்கு ஒரு கோடி டன் மீன் உற்பத்தியாகிறது. ஒரு வருடத்திற்கு ரூ600 கோடி தேசிய வருமானம் கிடைக்கிறது.
கடல்மீன் வளத்தில் நிறைய மீன் வகைகள் உள்ளன. அவை கானாங்கத்தி, சாளை மற்றம் இரால்கள். இன்னும் நிறைய விரும்பிய வகைகள் வவ்வல், நெய்மீன், சேல்மோன் இன்னும் பல. கடலோர பகுதிகளில் 6-10 மயில் தூரத்திற்கு கோடிக்கணக்கான மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். கடலோர மீன்பிடிப்பில் பருவ காலங்களில் மீன் பிடிப்பு ஏற்றத்தாள குறைந்து காணப்படும். சில மாதங்களுக்கு மீன்கள் கிடைக்கும் சில மாதங்களுக்கு கிடைக்காது. இந்தியாவில் மேற்கு கடற்கரை பகுதியில் மட்டும் நான்கில் மூன்று பங்கு மீன் உற்பத்தியாகிறது. படிப்படியாக கடல் மீன் வளத்தின் முன்னேற்றத்தால் ஏற்றமதியில் புதிய திருப்பம் கிடைத்துள்ளது. இந்திய அரசு ஏற்றுமதியில் கடல் பொருட்களில் உயர்ந்த தரம் கொண்டுவர தரக்கட்டுப்பாடு மற்றம் கப்பல் ஏற்றமதியில் சோதனைகள் என கொண்டுவரப்பட்டது. 1964ல் கடல் பொருட்கள் சோதனை குழு அமைக்கப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு கடல் பொருட்களுக்கு கட்டாய தர கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும் என்று ஆணைபிரப்பிக்கப்பட்டது.
ஏற்றுமதியை உயர்த்தும் முறைகள்
தொகுகலனடை மீன்கள் ஏற்றுமதிக்கு பதில் தகர தட்டு முறை வழங்குதல்
தொகுஇந்திய அரசின் கீழ் வணிகம் மற்றும் தொழில் அமைச்சகம் மூலம் கலனடை மீன்கள் ஏற்றுமதிக்கு பதில் தகர தட்டு முறை என்று புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் துணை கட்டுப்பாட்டு மேலாளர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி எர்ணாகுளம் (கொச்சி), இவரின் கீழ் யார் எல்லாம் கலனடை மீன்கள் செய்கின்றார்களோ அவர்களுக்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி இதன் மூலம் உலகளவில் மீன் ஏற்றுமதி செய்கிறார்களோ அவர்கள் பதிவுசெய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யாவிட்டால் மீன் வள முன்னேற்ற ஆலோசகர், உணவு மற்றும் வேளாண்மை அமைச்சகம், புதுடில்லி, அவரிடம் பதிவு செய்யலாம்.
கலனடைப்பு மீன்களுக்கு இதர தேவைகள் வழங்குதல்
தொகுசில பொருட்களுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கும் உள்வாரிய வரவு உள்ளது. உற்பத்தி பொருட்களை அதிகமாக ஏற்றுமதி செய்கின்றன. இதன் மூலம் ஏற்றுமதியாளர்கள் அல்லது உற்பத்தியாளர் உற்பத்திக்கு தேவையான பொருட்களை பெற முடிகிறது. இது போன்று பொருட்களை ஏற்றுமதி செய்ய புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு பதில் மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய கடல் பொருட்கள் ஏற்றுமதி வரலாற்றில, உறை குளிர்பதன கடல் பொருட்கள் ஏற்றுமதி ஒரு மைல்கல் பதித்துள்ளது. இந்தியாவில் தற்போது கடல் பொருட்கள் ஏற்றுமதி மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. உலக பகுதிகளில் இந்தியா 1950-51ல் கடல் பொருட்கள் ஏற்றுமதி மூலம் 19700 டனின் விலை ரூ2.46 கோடி கிடைத்துள்ளது. 1953ல் உறை குளிர்பதன இறால் ஏற்றமதிக்கு வந்தது. 1960-61ல் ஏற்றுமதி அளவு குறைந்தது. 15,700 டன். ஆனால் விலை உயர்ந்தது.ரூ3.92 கோடி அதிலிருந்து 1987-88ல் ஏற்றுமதி உயர்ந்தது. 97,200 டனின் விலை ரூ531 கோடி.1990-91 ல் ஏற்றுமதி நிலை 139,419 டன். இதன் விலை ரூ893 கோடியாகும்.
ஏற்றுமதியின் சிறப்பு அம்சங்கள்
தொகு- உறை குளிர்பதன இறால் ஏற்றுமதி மூலம், அளவில் 7.2% ரூபாயில் 8.7% மற்றும் டாலரில் 5.6% உயர்ந்துள்ளது.
- உறை குளிர்பதன மீன் ஏற்றுமதி மூலம், அளவில் 19.5%, ரூபாயில் 7.6%,மற்றும் டாலரில் 4.5% உயர்ந்துள்ளது.
- உறை குளிர்பதன கணவாய் மூலம், அளவில் 7.4%, ரூபாயில் 9.1%, டாலரில் 5.5% உயர்ந்துள்ளது.
- குளிர்ந்த பொருட்கள் ஏற்றுமதி மூலம் 17.79% அளவு, ரூபாயில் 54.14% மற்றும் டாலரில் 49.7%உயர்ந்துள்ளது.
- ஊசி கணவாய் மீன்கள் ஏற்றுமதியில் அளவு 6%, குறைந்திருந்தாலும், ரூபாய் 4%, மற்றும் டாலரில் 1% உயர்ந்துள்ளது.
- உலர் மீன்கள் ஏற்றுமதியில் அளவில் 2%, குறைந்திருந்தாலும் ரூபாய் 5.8%, மற்றும் டாலர் 2.8%, உயர்ந்துள்ளது.
- உயிருடன் மீன்கள் ஏற்றுமதியில் தொடந்து சரிந்து வருகின்றது. அளவு 21.8%, ரூபாய் 19.35, மற்றும் டாலரில் 21.6%.
உறை குளிர்பதன இறால்
தொகுநம் நாட்டு ஏற்றுமதியில் உறை குளிர்பதன இறால் ஏற்றமதி ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. 1999-2000ல் மொத்த கடல் பொருட்கள் ஏற்றுமதியில் 71% உறை குளிர்பான இறால் ஏற்றுமதியாகும். 2007ல் உறை குளிர்பதன இறால் ஏற்றுமதியை மற்ற வருடங்களுடன் ஒப்பிடும் போது 33.83%ல் இருந்து 33.31% குறைந்துள்ளது. ஆனால் 7.21% அளவு மற்றும் 8.67% ரூபாயில் உயர்ந்துள்ளது. இதே போன்று டாலரிலும் 7.82%ல் இருந்து 7.69% உயர்ந்துள்ளது. இருந்தாலும் ஜப்பான் சந்தைக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் இறாலில் எந்தவித மாற்றமும் இல்லாமல் முதல் நாடாக விற்பனை செய்கிறது. இரண்டாவதாக ஐரோப்பிய நாடுகளுக்கு ரூ155.66 கோடிக்கு விற்பனை செய்கிறது. மூன்றாவது நாடாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. 21.391 மெ.டனின் விலை 633.73 கோடி 2007ல் ஏற்றுமதியாகியுள்ளது. இதுமட்டம் இல்லாமல் தென்கிழக்கு ஆசிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. 1949-2000 வருடத்தில் ரூ326.38-330.85 இறால் ஏற்றுமதி உயர்ந்துள்ளது.
உறை குளிர்பதன மீன்
தொகுஉறை குளிர்பதன மீன் ஏற்றுமதியின் பங்கு 38% அளவு மற்றும் 10.45% விலை இந்திய கடல் பொருட்கள் ஏற்றுமதியில் ஆகும். இதற்கு முந்தைய வருடதிதில் வாளை மீன் (30%). அதை தொடர்ந்து போரம்ஃப்ர்ட்(24.53%) கோர்கள் (8.55%) கானாங்கத்தி (7.75%) நெய்மீன் (5.73%). இது இல்லாமல் மதிப்பட்டால் பொருட்கள் மூலம் 3.80% பங்கு ஏற்றுமதியில் உயர்ந்துள்ளது. இந்த வருடத்தில் மட்டும் ரூ8.85 கோடி முதல் ரூ20.22 கோடி உயர்ந்துள்ளது. மொத்த உறை குளிர்பதன மீன் இறக்குமதியில் சீனா முதல் இடத்தில் உள்ளது. 57.69% அளவில் மற்றும் 46 விலையில் இறக்குமதியாகிறது.
தலைக்காளி
தொகுஇந்தியதவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தான் பெரும்பாலான தலைக்காளிகள் ஏற்றமதி செய்யப்படுகிறது. இது மொத்த ஏற்றுமதியில் 53%. ஸ்பெயின் மொத்த ஏற்றுமதியில் 2.5% பங்கு உள்ளது. தலைக்காளியின் மொத்த ஏற்றுமதி மூலம் 2921 மெட்ரிக் டனின் விலை ரூ49.56 கோடி உயர்ந்துள்ளது. குளிர்ந்த பொருட்கள் ஏற்றுமதியில் 17.68% அளவு மற்றும் 54.11% விலை உயர்ந்துள்ளது. உலர்ந்த மற்றும் உயிருள்ள பொருட்களை ஏற்றுமதி குறைந்மு வருகின்றது. வண்ண மீன்களின் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. நண்டின் ஏற்றுமதி 64%. மற்ற பொருட்கள் இறால் பொடி, குளிர்ந்த நண்டு, நண்டு ஓடு, உயிருள்ள நத்தை இவை அனைத்தும் ஏற்றமதி செய்யப்படுகிறது.
முக்கிய சந்தைகள்
தொகுஇந்தியாவிலிருந்து ஏற்றமதி செய்யப்படுகின்ற முக்கியமான சந்தைகள் - ஜப்பான், ஐரோப்பிய, அமெரிக்க, தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள். இந்த சந்தைகளில் ஜப்பான் முதல் இடம் வகிக்கிறது. இந்தியா ஜப்பானுக்கு 19.6% அளவில் ரூ2263.6 கோடியில் ஏற்றுமதி செய்கிறது.
சந்தையின் பங்குகள்
தொகுஇந்தியாவில் மொத்த ஏற்றுமதியில் நாடுகளின் பங்கு - ஜப்பான் 44%, அமெரிக்கா 15%, ஐரோப்பா 18%, தென்கிழக்கு ஆசியா 18%, மத்திய கிழக்கு நாடுகள் 2% மற்றும் மற்ற நாடுகள் 3%.