இந்தியாவில் தற்பால்சேர்க்கை

இந்தியாவில் தற்பால்சேர்க்கை (Homosexuality in India) என்பது பழங்காலம் முதல் நவீன காலம் வரை விவாதப் பொருளாக உள்ளது. தற்பால் சேர்க்கை பாத்திரங்கள் மற்றும் கருப்பொருள்கள் குறித்து இந்து நூல்கள் பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்துள்ளன. [1] நான்கு வேதங்களில் ஒன்றானதும் மிக முக்கியமானதாக இருக்கும் இருக்கு வேதம், விக்ரிதி ஏவம் பிரகிருதி (இயற்கைக்கு மாறானதாகத் தோன்றுவதும் இயற்கையானதே) என்று கூறுகிறது, [2] சில அறிஞர்கள் மனித வாழ்க்கையின் தற்பால் சேர்க்கை பரிமாணங்களைக் கொண்ட மற்ற உலகளாவிய பன்முகத்தன்மையைப் போன்றது என அங்கீகரிக்கின்றனர், வாத்சாயனர் எழுதிய பண்டைய இந்திய உரையான காமசூத்திரம் சிற்றின்ப தற்பால் சேர்க்கை நடத்தை பற்றிய ஒரு முழுமையான அத்தியாயத்தை கூறுகிறது. வரலாற்றில், இந்திய துணைக்கண்டம் முழுவதும் தற்பால் சேர்க்கை அதிகமாக இருந்ததையும், பிரித்தானிய காலனி ஆட்சியின் போது சுமார் 18 ஆம் நூற்றாண்டு வரை தற்பால் சேர்க்கையாளர்கள் எந்த வகையிலும் தாழ்ந்தவர்களாக கருதப்படவில்லை என்பதையும் வரலாற்று இலக்கிய சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. [3]இருப்பினும், முகலாயப் பேரரசின் போது ஃபதாவா ஆலம்கிரியின் இஸ்லாமிய சட்டத்தின் கீழ், ஆண் முஸ்லீம் தற்பால் சேர்க்கை ஈடுபட்டது தெரிய வந்தால் கசையடி அல்லது கல்லால் அடித்தல் போன்ற தண்டனை வழங்கப்பட்டது. 6 செப்டம்பர் 2018 அன்று, இந்திய உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 இன் ஒரு பகுதியை செல்லாததாக்கியது, எனவே இந்தியாவில் தற்பால் சேர்க்கையை சட்டப்பூர்வமாக்கியது. [4] ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக் கூடிய காலனித்துவ காலச் சட்டத்தை ரத்து செய்ததன் மூலம்,"இது சிறந்த எதிர்காலத்திற்கு வழி வகுக்கும்" என்று ஒரு நீதிபதி கூறினர். [5] இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தில்லி ஒப்பந்தம் 1952 ன் பிரிவு 141 ன் கீழ் சம்மு -காஷ்மீர் மாநிலத்திற்கும் இந்த தீர்ப்பு பொருந்தும், [6] [7]

இந்தியாவில் ந,ந,ஈ,தி மக்கள்தொகைக்கு அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இல்லை, ஆனால் இந்திய அரசாங்கம் 2012 இல் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புள்ளிவிவரங்களை சமர்ப்பித்தது, அதன்படி, இந்தியாவில் சுமார் 2.5 மில்லியன் தற்பால் சேர்க்கையாளர்கள் தங்களைப் பதிவு செய்துள்ளனர் என்று கூறியது. இந்த புள்ளிவிவரங்கள் சுகாதார அமைச்சகத்திடம் தங்களை சுயமாக அறிவித்த நபர்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. பல ந,ந,ஈ,தி இந்தியர்கள் பாகுபாட்டிற்கு பயந்து தங்களை வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பதால் இது முழுமையான புள்ளி விவரமாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகும். [8]

தற்பாலினர் வெறுப்பு இந்தியாவில் பரவலாக உள்ளது.[9][10] இந்தியாவில் தற்பால் சேர்க்கைபற்றிய பொது விவாதம் தடைபட்டுள்ளது, எந்தவொரு வடிவத்திலும் பாலியல் வெளிப்படையாக விவாதிக்கப்படுவதில்லை. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், தற்பால் சேர்க்கைமீதான அணுகுமுறை சற்று மாறியுள்ளது. [11] மற்றும் சினிமாவில் தற்பால் சேர்க்கைபற்றிய அதிக சித்தரிப்புகள் மற்றும் விவாதங்கள் நடந்துள்ளன. [12] மூன்றாம் பாலினத்தின் சமூகக் கூறுகளைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் ந,ந,ஈ,தி சமூகத்திற்கு எதிரான மன, உடல், உணர்ச்சி மற்றும் பொருளாதார வன்முறை தொடர்ந்து பிரச்சனையாக உள்ளது.[13] குடும்பம், சமூகம் அல்லது காவல்துறையினரின் ஆதரவு இல்லாததால், பல ஓரினச் சேர்க்கையாளர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்கள் குற்றங்களைப் புகாரளிப்பதில்லை.[14]

சான்றுகள்

தொகு
  1. Ashok Row Kavi. "Expose the Hindu Taliban!". Rediff.com. 
  2. Stephen Hunt; Andrew K. T. Yip (1828). The Ashgate Research Companion to Contemporary Religion and Sexuality.
  3. Ruth Vanita; Saleem Kidwai. "Indian Traditions of Love". Tehelka. 
  4. Rautray. "Section 377: SC rewrites history, homosexual behaviour no longer a crime". The Economic Times. 
  5. "India's Supreme Court strikes down law that punished gay sex". ABC News. பார்க்கப்பட்ட நாள் 6 September 2018.
  6. "SC decriminalises gay sex, but J&K LGBTs will have to wait longer". DNA. September 9, 2018. பார்க்கப்பட்ட நாள் February 27, 2021.
  7. Jan, Ifran (October 9, 2018). "Section 377 verdict: Legally safe, socially targetted, Kashmir's LGBTQ face a huge challenge of acceptance". Daily O. பார்க்கப்பட்ட நாள் February 27, 2021.
  8. "India has 2.5m gays, government tells supreme court". BBC News. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.
  9. Bedi, Rahul (5 July 2011). "Homophobia persists in India despite court reforms". The Telegraph (UK) (London). https://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/8618084/Homophobia-persists-in-India-despite-court-reforms.html. 
  10. "Fear and loathing in gay India". BBC News. 17 May 2005. http://news.bbc.co.uk/2/hi/south_asia/4304081.stm. 
  11. . 
  12. Gopinath, Gayatri (2000). "Queering Bollywood: Alternative sexualities in popular Indian cinema". Journal of Homosexuality 39 (3–4): 283–297. doi:10.1300/J082v39n03_13. பப்மெட்:11133137. 
  13. "Violence against LGBT groups still prevails in India". DNA India. 24 November 2013. http://www.dnaindia.com/delhi/report-violence-against-lgbt-groups-still-prevails-in-india-1924112. 
  14. Priya M Menon (16 February 2013). "Lacking support, male rape victims stay silent". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/city/chennai/Lacking-support-male-rape-victims-stay-silent/articleshow/18524668.cms. "I did not know how the police would treat a gay man."