இந்தியாவில் பொல்லாக்குச் சட்டம்
இந்தியாவில் பொல்லாக்குச் சட்டம் (Tort Law in India) தொகுத்தமைக்கப்பட்ட எழுத்துருச் சட்டங்களின் பிற்சேர்க்கையாக வளர்ச்சியுரும் ஒரு புதிய பொதுச் சட்டமாகும். பொல்லாக்கை பொதுவாக குடிமை, உடைமை அல்லது உரிமை சார்ந்த தவறுகள் என அழைக்கலாம். பொல்லாக்குச் சட்டம் குடிமை, உடைமை மற்றும் உரிமைத் தொடர்பான தவறுகளையும் அதற்கான தீர்வுகளையும் பற்றிய சட்டமாகும். இந்தியா பொதுவாக ஐக்கிய இராச்சியத்தின் முறையைப் பின்பற்றும் போதும், நீதியக நடவடிக்கையினால் சில மாற்றங்கள் ஏற்படுகிறது, இதனால் முரண்பாடுகளும் உருவாகியுள்ளன. இந்தியாவில் அதிகமாக வளர்ச்சிக் கண்டுள்ள பொல்லாக்கு அரசியல் அமைப்பு பொல்லாக்காகும்.[1][2][3]