இந்தியாவில் வெறுப்புப் பேச்சு சட்டங்கள்

இந்திய அரசமைப்பில் மக்களிடையே வெறுப்புப் பேச்சுகளால் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க வெறுப்புப் பேச்சு சட்டங்கள் உள்ளன. இதன்படி ஒரு குடிமகனை அவரின் இனம், மொழி, பண்பாடு, வாழும் பகுதி, சமூகம் போன்ற ஏதோ ஒரு காரணத்திற்காகத் திட்டுபவர் தண்டிக்கப்படுவார். குறிப்பாக, சமய நம்பிக்கைப் பற்றி கேலி பேசி புண்படுத்துவோர் கடுமையாக தண்டிக்க்கப்படுவர்,

அரசமைப்புச் சட்டம்

தொகு

இந்திய அரசமைப்புச் சட்டம் இந்திய ஒன்றியத்திற்கு அடையாளமாக எந்த ஒரு தனி மதத்தையும் குறிப்பிடவில்லை. பகுதி 25 (1) இன் படி "அனைத்து குடிமக்களும் சமமான உரிமைகள் அளிக்கப்பட்டு அவர்களின் சமய நம்பிக்கையை கொண்டிருக்கவும் பரப்பவும் உரிமை அளிக்கப்படுகிறார். பகுதி 19 (Article 19) அனைத்து குடிமகன்களுக்கும் பேச்சு உரிமையை வழங்குவதுடன், பொது நாகரிகம், நீதி கருதி சில இடங்களில் வரைமுறை அளித்துள்ளது. [1]

மேற்கோள்கள்

தொகு