இந்திய-ஆசிய செய்திச் சேவை

இந்தோ-ஆசியன் செய்திச் சேவை (Indo-Asian News Service) சுருக்கமாக ஐ.ஏ.என்.எசு. என்று அழைக்கப்படுவது ஒரு தனியார் இந்திய செய்தி நிறுவனம் ஆகும்.

இந்தியாவின் வெளிநாட்டு செய்தி சேவையாக இந்திய அமெரிக்கரான கோபால் ராசு என்கிற வெளியீட்டாளர் இந்நிறுவனத்தை நிறுவினார். பின்னர் இது இந்தோ-ஆசியன் செய்திச் சேவை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இச்செய்தி நிறுவனம் தனது முக்கிய அலுவலகங்களை இந்தியாவின் நொய்டாவில் அமைத்துள்ளது.

இந்தியாவைப் பற்றிய செய்திகள், கருத்துகள் மற்றும் நாட்டைப் பற்றி பரவலான பல்வேறு வகையான தலைப்புகளில் பகுப்பாய்வு செய்திகளை அறிக்கையாக வெளியிடுகிறது. மேலும், துணைக்கண்டத்தின் செய்தி அம்சங்கள் மற்றும் கருத்துகள் இணையம் வழியாக நிறுவனத்தின் சந்தாதாரர்களிடம் சேர்க்கிறது.

சேவைகள் தொகு

தொடக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் வழியான வானொலி மற்றும் தொலைக்காட்சி போன்ற கம்பிவழி செய்தி சேவைக்காக ஐ.ஏ.என்.எசு. நிறுவனம் அறியப்பட்டது. இதைத் தவிர செய்தித்தாள் மற்றும் பத்திரிகை வெளியீட்டு சேவைகள் மூலமும் ஊடகத்துறையில் இயங்கி வந்தது. கைபேசி செய்தி சேவையையும் இந்நிறுவனம் வழங்கி வருகிறது [1].

மேற்கோள்கள் தொகு