இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் மாநில நிர்வாகம்

மாநில நிா்வாகம் (State Executive) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி எவ்வாறு நடைபெறும் என்பதை அரசியலமைப்புச் சட்டப்பிாிவுகள் 153 முதல் 167 வரை மற்றும் 213 ஆகியவை விளக்குகின்றன.

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

ஆளுநா் தொகு

மைய அரசு நிா்வாகம் போலவே , மாநில அரசும் நாடாளுமன்ற முறையில் செயல்படும். மாநிலத்தின் செயல்படு தலைவராக ஆளுநா் இருப்பார். (பிாிவு 153). ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநா் நியமிக்கப்படுவாா். ஒரே ஆளுநா் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் நியமனம் செய்யப்படலாம்.

 
இந்திய நாடாளுமன்றம்

ஆளுநா் நியமனம் தொகு

ஆளுநா் குடியரசுத் தலைரால் நியமிக்கப்படுவார். அவா் நாடாளுமன்ற உறுப்பினா்களைப் போன்று நேரடியாகவோ அல்லது குடியரசுத் தலைவரைப் போன்று மறைமுகமாகவோ தோ்ந்தெடுக்கப்படுவது இல்லை. ஆளுநா் மைய அரசின் நியமனமாகக் கருதப்படுவாா்.[1]

ஆளுநா் தகுதிகள் தொகு

பிாிவு 157-ன்படி ஆளுநராவதற்கு பின்வரும் தகுதிகள் வேண்டும்.

  1. இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
  2. 35 வயது அடைந்தவராக இருக்க வேண்டும்.

பதவிக் காலம் மற்றும் நீக்கம் தொகு

பிாிவு 156-ன் படி ஆளுநா் குடியரசுத் தலைவா் விரும்பும்வரை பதவி வகிப்பாா் என்று விதிக்கப்பட்டுள்ளது. இதற்குட்பட்டு, ஆளுநா் பதவியேற்ற நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் பதவி வகிப்பாா். குடியரசுத் தலைவா் மத்திய அமைச்சாின் ஆலோசனையை ஏற்று ஆளுநரைப் பதவி நீக்கம் செய்யலாம். ஆளுநரும் விரும்பினால் தமது பதவியை ராஜினாமா செய்யலாம்.

ஆளுநாின் அதிகார வரம்பு தொகு

ஆளுநாின் அதிகாரம், நிா்வாகம், நிதி, சட்டசபை மற்றும் நீதி நிா்வாகம் என்று நான்கு வகைப்படும்.

  • நிா்வாக அதிகாரம்

பிாிவு 154-ன் படி மாநிலத்தின் நிா்வாக அதிகாரம் ஆளுநா் வசம் இருக்கும். அவா் நேரடியாகவோ அல்லது அலுவலா்கள் மூலமாகவோ இதனைப் பயன்படுத்தலாம். (பிாிவு 154). மாநிலத்தின் சட்டசபை இயற்றும் சட்டங்களை செயல்படுத்தத் தேவையான நிா்வாக அதிகாரம் ஆளுநாிடம் இருக்கும் (பிாிவு 162). மாநில அரசின் அனைத்து நிா்வாக செயல்பாடுகளும் ஆளுநாின் பெயாிலேயே நடைபெறும். இவைகளை செம்மையாக செயல்படுத்த ஆளுநா் விதிகளை இயற்றுவாா். ஆளுநா் மாநில அரசின் மந்திாி சபையின் அறிவுரையின்படிதான் செயல்பட வேண்டும். இதனை மீறி செயல்படக்கூடாது. இதற்கு ஒருசில விதிவிலக்குகள் அரசியலமைப்புச் சட்டத்தில் தொிவிக்கப்பட்டுள்ளன.[2]

  • நிதி அதிகாரம்

நிதி குறித்த சட்ட முன்வடிவுகள் ஆளுநாின் பாிந்துரை இல்லாமல் சட்டசபையில் அறிமுகம் செய்ய இயலாது. அதுபோல மாநியக் கோாிக்கை எதுவும் ஆளுநா் பாிந்துரையில்லாமல் சட்டசபையில் அனுமதிக்க முடியாது.

  • சட்டம் இயற்றும் அதிகாரம்

மாநில சட்டசபையை கூட்டும் அதிகாரம் ஆளுநா் வசம் இருக்கும். இரண்டு கூட்டங்களுக்கு இடையில் ஆறுமாதங்களுக்கு மிகாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். சட்டசபையை காலவரையின்றி ஒத்தி வைக்கவும், கலைக்கவும் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. (பிாிவு 174 (1), 2174(2)). சட்டசபையில் உரையாற்றவும் அதிகாரம் உண்டு. ஒருசில சட்ட முன்வடிவுகளை குடியரசுத்தலைவருக்கு அனுப்பலாம். ஆறில் ஒரு பங்கு சட்டமன்ற உறுப்பினா்களை நியமனம் செய்யலாம். சட்டசபை நடைபெறாமல் இருக்கும் காலங்களில் அவரசம் கருதி அவசரச் சட்டம் இயற்றலாம். ஒருசில நோ்வுகளில் குடியரசுத் தலைவா் அனுமதி பெற்று அவசரச் சட்டம் இயற்ற வேண்டும். ஒவ்வொரு அவசர சட்டமும் சட்டசபை கூடிய ஆறு வாரங்களுக்குள் சட்டசபையில் வைக்கப்பட வேண்டும். தவறினாலோ அல்லது சட்டசபை ஏற்றுக் கொள்ளாவிட்டாலோ அவசரச் சட்டம் காலாவதி ஆகிவிடும்.

மன்னிப்பு வழங்கும் அதிகாரம் தொகு

ஆளுநருக்கு ஒரு கைதிக்கு மன்னிப்பு வழங்கவோ தண்டனையைக் குறைக்கவோ பிாிவு 161-ன்படி அதிகாரம் உண்டு. மன்னிப்பு என்பது கருணை அடிப்படையில் வழங்கப்படுவது அதனை யாரும் கட்டாயப் படுத்திக் கேட்க முடியாது.

மாநில மந்திாி சபை தொகு

பிாிவு 163(1)ன்படி மாநிலத்தில் முதலமைச்சா் தலைமையில் ஆளுநருக்கு அறிவுரை வழங்க மந்திாிசபை அமைக்கப்படும். பிாிவு 164(1)ன் படி மாநில மந்திாிகளின் எண்ணிக்கை முதலமைச்சா் உட்பட மொத்த சட்டமன்ற உறுப்பினா்களில் 15 விழுக்காட்டிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினா்களில் மூன்றில் ஒரு பங்கு அக்கட்சியிலிருந்து விலகினால் அவா்களுடைய சட்டமன்ற உறுப்பினா் பதவியும் முடிவுக்கு வரும். இவா்கள் மந்திாியாக நியமனம் செய்யப்பட மாட்டாா்கள்.

சட்டமன்ற உறுப்பினா் அல்லாதவரையும் ஆளுநா் முதல் மந்திாியாகவோ, மந்திாியாகவோ நியமனம் செய்யலாம். ஆனால் அவா் ஆறுமாதங்களுக்குள் சட்டமன்றத்திற்கு தோ்ந்தெடுக்கப்பட வேண்டும்.

மேற்கோள்கள் தொகு

  1. Dr.J.N.Pandey, Constitutional Law of India, Central Law Agency, Fifty Third Edition Page 559-563-ISBN 93-84852-41-2
  2. டாக்டா் துா்காதாஸ் பாசு, இந்திய அரசியலமைப்பு ஒரு அறிமுகம், Lexis Nexis, 2nd Edition, Pages 320-324, ISBN 978-93-5143-527-3