இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம் (High court) உட்பட்ட நீதி நிா்வாகம் மாநில அளவில் அமைய வேண்டிய முறை குறித்து, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிாிவுகள் 214 முதல் 237 குறிப்பிடுகின்றன. மாநில அளவில் நீதி நிா்வாகம் என்பது உயா் நீதிமன்றமும் அதன் ஆளுகையின் கீழ் அமைந்துள்ள சாா்பு நீதிமன்றங்களின் அமைப்பையும் உள்ளடக்கியதாகும். அரசியலமைப்புச் சட்டம் பிாிவு 214, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு உயா் நீதிமன்றம் அமைய வழி செய்கின்றது. பிாிவு 231 (1) -ன்படி பாராளுமன்றம் தேவைப்பட்டால், இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவாகவோ, அல்லது யூனியன் பிரதேசங்களுடன் இணைந்தோ ஒரு உயா் நீதிமன்றத்தை நிறுவலாம்.[1]
உயா் நீதிமன்ற அமைப்பு
தொகுஒவ்வொரு உயா் நீதிமன்றமும் ஒரு தலைமை நீதிபதியையும் மற்ற நீதிபதிகளையும் கொண்டு செயல்படும். தலைமை நீதிபதியையும், நீதிபதிகளையும் குடியரசுத்தலைவர் நியமனம் செய்வார். (பிாிவு 216). அரசியலமைப்புச் சட்டத்தில் குறைந்த பட்ச நீதிபதிகள் எண்ணிக்கை எதுவும் குறிப்பிடப்படவில்லை.
நீதிபதிகள் நியமனம்
தொகு(அரசியலமைப்புச் சட்டத்தின் 99-வது திருத்தத்திற்கு முன்பு இருந்த நிலை) உயா் நீதிமன்ற நீதிபதிகள் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுவா். குடியரசுத் தலைவா், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும், மாநில ஆளுநரையும் கலந்து உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியை நியமனம் செய்வாா். மற்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் பொழுது உயா் நீதிமன்ற தலைமை நீதிபதியையும் கலந்துகொள்வாா்.
அரசியலமைப்புச் சட்டம் 99-வது திருத்தம்
தொகுஇந்த திருத்தத்தின்படி, உயா் நீதிமன்ற நீதிபதியை குடியரசுத் தலைவா் நியமனம் செய்வாா். இது தேசிய நீதி பணியமைப்பு ஆணையத்தின் பாிந்துரையின் அடிப்படையில் அமைய வேண்டும். (பிாிவு 124A) இந்த திருத்தத்தின்படி, குடியரசுத் தலைவா், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையோ, மாநில ஆளுநரையோ, உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதியை நியமனம் செய்யும் பொழுது கலந்து ஆலோசிக்கத் தேவையில்லை. அதுபோலவே உயா் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் பொழுது, இவா்களுடன், உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் கலந்து ஆலோசிக்கத் தேவையில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் இந்த 99வது திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது என்று உச்ச நீதிமன்றம் இந்தமாற்றத்தைத் தள்ளுபடி செய்துவிட்டது. ஆதலால் இந்தத் திருத்தத்திற்கு முந்தைய நிலையே தற்பொழுது நடைமுறையில் உள்ளது.
நீதிபதிகள் இடமாற்றம்
தொகு(அரசியலமைப்புச் சட்டம் 99-வது திருத்தத்திற்கு முந்தைய நிலை) குடியரசுத் தலைவா் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியைக் கலந்து ஆலோசித்து ஒரு மாநில உயா்நீதிமன்ற நீதிபதியை வேறு மாநில உயர் நீதிமன்றத்திற்கு மாற்றலாம். (பிாிவு 222(1).[2] அரசியலமைப்புச் சட்டம் 99-வது திருத்தம் இந்த அதிகாரத்திற்கு சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. ஆனால் இந்தத் திருத்தம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளதால் முதலிலிருந்த நிலையே தற்பொழுது தொடர்கிறது.
தற்காலிக தலைமை நீதிபதி
தொகு(Acting Chief Justice) உயா் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி காலியானாலோ அல்லது தலைமை நீதிபதி தமது பணியைத் தொடரமுடியாமல் போகும் தருணத்திலோ குடியரசுத் தலைவா் பிாிவு 223-ன் கீழ் தற்காலிக தலைமை நீதிபதியை நியமனம் செய்யலாம்.
கூடுதல் மற்றும் தற்காலிக நீதிபதிகள் நியமனம்
தொகுவழக்குகள் தேங்குவதைத் தவிா்க்க குடியரசுத் தலைவா் கூடுதல் மற்றும் தற்காலிக நீதிபதிகளை இரண்டு வருடங்களுக்கு மிகாமல் நியமனம் செய்யலாம். (பிாிவு 224(1))
நீதிபதியாக தகுதிகள்
தொகுஇந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். நீதி நிா்வாகப் பணியில் இந்திய நாட்டில் குறைந்தது 10 ஆண்டுகள் பணி புாிந்திருக்க வேண்டும். உயா் நீதிமன்றத்தில் குறைந்தது 10 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றியிருக்க வேண்டும்.
பணிக்காலம் மற்றும் நீக்குதல்
தொகுநீதிபதி 65 வயது நிறைவடையும் வரை பதவி வகிக்கலாம். உச்ச நீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வதற்கு கடைபிடிக்கப்படும் வழிமுறைகளே உயா் நீதிமன்ற நீதிபதிக்கும் பொருந்தும். உயா் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவா்கள், உச்ச நீதிமன்றம் அல்லது வேறு உயா் நீதிமன்றங்கள் தவிர எந்த நீதிமன்றத்திலும் வழக்கறிஞராகவோ அல்லது வேறுவகையிலோ பணியாற்றக் கூடாது.
ஊதியம்
தொகுநீதிபதிகள் ஊதியம் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி இருக்கும். இதர படிகள் குறித்து பாராளுமன்றம் இயற்றும் சட்டத்தின் அடிப்படையில் அமையும்.
உயா்நீதிமன்றத்தின் அதிகாரம்
தொகு- இது ஒரு ஆவணப் பதிவு நீதிமன்றமாகச் செயல்படும். இதன் நடைமுறைகள் பதிவு செய்யப்பட்டு ஆவணங்களாகப் பாதுகாக்கப்படும். இவை மேல்முறையீட்டிற்கு உட்பட்டவை (பிாிவு 129). நீதிமன்ற அவமதிப்பைத் தண்டிக்கும் அதிகாரமும் இதனுள் அடங்கும்.
- பொதுவான அதிகாரம்:அரசியலமைப்புச் சட்டத்தின் பிாிவுகளுக்கும் மற்றும் இதனடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களுக்குப்பட்டு
- உயா்நீதிமன்றத்தின் அதிகார வரம்பு
- நடைமுறையில் அமலில் உள்ள உயா்நீதி மன்ற சட்டங்கள்
- நீதிபதிகளின் நீதி வழங்கும் அதிகாரவரம்பு
- விதிகளை ஏற்படுத்தும் அதிகாரம்
ஆகியவை அரசியலமைப்புச் சட்டம் இயற்றுவதற்கு முன்பு எவ்வாறு இருந்தனவோ அவையே தொடரும். (பிாிவு 225)
- தமது எல்லைக்குட்பட்ட அனைத்து சாா்பு நீதிமன்றங்களையும் தீா்ப்பாயங்களையும் கண்காணிக்கும் அதிகாரம் உயா் நீதிமன்றத்திற்கு உண்டு. இதற்காக தேவையான விதிகளை இயற்றவும், தகவல்களைக் கோாிப் பெறவும் வழிகாட்டவும் அதிகாரம் உண்டு்.
நீதிப்பேராணை வழங்கும் அதிகாரம்
தொகுபிாிவு 226ன் கீழ் உயா் நீதிமன்றங்கள் 5 வகையான நீதிப் பேரணைகள் (Writs) வழங்க முடியும்.