இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மொழிகள்
மொழிகள் (Languages) இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு, இந்தியாவில் பலவேறு மொழிகள் வழக்கில் இருந்ததால் அவைகளைக் கையாள்வது பெரிய சவாலாக இருந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் பொழுது இந்தியாவில் 1652 மொழிகள் பேச்சு வழக்கில் இருந்தன. இவைகளில் இந்திய மொழிகளல்லத 63 மொழிகளும் அடங்கும்.[1]
இந்தி ஆங்கிலம்
தொகுஅரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் ஒரு சில மொழிகளை அலுவலக தகவல் பரிமாற்றத்திற்காக அறிவிக்க வேண்டியிருந்தது. மொத்த பேச்சு வழக்கில் இருந்த 1652 மொழிகளில் 22 மொழிகள் (எட்டாவது அட்டவணை) ஏறக்குறைய 91 விழுக்காடு மக்களால் பேசப்பட்டு வந்தது. இதில் இந்தி மொழி அதன் மறுவடிவங்களான உருது, இந்துஸ்தானி ஆகியவைகளுடன் ஏறக்குறைய 46 விழுக்காடு மக்களால் பேசப்பட்டு வந்தது. ஆதலால் இந்தியும், அதன் தேவநாகரி எழுத்துவடிவமும் இந்தியாவின் அலுவலக மொழியாகவும், ஆங்கிலம் 15 ஆண்டுகளுக்கு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது. (பிரிவு 351)
இந்தி அலுவலக மொழியாக அறிவிக்க்ப்பட்டாலும் மாநில சட்டமனடறங்கள் தங்களுக்கு தேவையான மொழிகளை தங்களுக்குள் தகவல் பாிமாற்றத்திற்காக அறிவித்துக் கொள்ளலாம் (பிாிவு 347)
அலுவலக மொழி
தொகுஇந்திய அரசியல் சாசனப் பிரிவு 343-ன் படி இந்தி அதன் தேவநாகரி எழுத்துவடிவத்தில் இந்தியாவின் அலுவலக மொழியாக இருக்கும். 15 வருடங்களுக்கு ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்படும். அதன் பின் பாராளுமன்றம் சட்டம் இயற்றுவதன் மூலம் ஆங்கிலத்தைத் தொடரலாம். இதனடிப்படையில் பாராளுமன்றம் அலுவல மொழிகள் சட்டம் 1963-ஐ இயற்றியது.[2]
அலுவலக மொழிகள் ஆணையம்
தொகுஅரசியல் சாசனப் பிரிவு 344-ன் படி குடியரசுத் தலைவர் அலுவலக மொழிகள் ஆணையத்தை நிறுவலாம். இதன் முக்கிய பணி, குடியரசுத் தலைவருக்கு அலுவலக மொழிகள் குறித்து அறிவுரை வழங்குவதாகும்.
இந்த ஆணையம் முதலில் ஐந்து வருடம் கழித்தும் பின்பு 10 வருடங்கள் கழித்தும் நிறுவப்படும். எட்டாவது அட்டவணையில் உள்ளிட்ட மொழிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கி ஆணையம் நிறுவப்படும்.
முக்கிய பணிகள்
தொகு- இந்தி மொழியை தொடர்ந்து அலுவலக மொழியாகப் பயன்படுத்த ஆவன செய்தல்
- ஆங்கிலத்தின் பயன்பாட்டை இந்திய அரசின் செயல்பாட்டில் குறைத்தல்
- உச்ச நீதிமறத்திலும், உயர் நீதிமன்றத்திலும், இந்திய அரசு மற்றும் மாநில அரசின் சட்டங்களில் பயன் படுத்தப்படும் மொழிகள் குறித்த ஆலோசனை வழங்குதல்.
- இந்திய அரசின் செயல்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டிய எண்ணுருக்கள் குறித்த ஆலோசனை வழங்குதல்
- இந்திய அரசின் அலுவலக மொழிகள் குறித்தும், மாநில அரசுகளுக்கும் இந்திய அரசிற்கும் நடை பெரும் தகவல் பரிமாற்றம் செய்யப்பட வேண்டிய மொழிகள் குறித்தும் அறிவுரை வழங்கும்
ஆணையம் பரிந்துரை வழங்கும் போது இந்தியாவின் அறிவியல், கலாசாரம் மற்றும் தொழில் துறை மேம்பாட்டினையும், இந்தி பேசாத மக்களின் அரசுப் பணியில் சேர்வதற்கான நியாயமான வாய்ப்பினையும் கருத்தில் கொள்ள வேண்டும்.