இந்திய ஒன்றியம்

இந்திய ஒன்றியம் அல்லது இந்திய ஐக்கியம் (இந்தியன் யூனியன், Indian Union) அல்லது இந்திய மேலாட்சி அரசு (இந்திய டொமினியன், Dominion of India) ஆகஸ்ட் 15 1947க்கும் ஜனவரி 26 1950க்கும் இடையில் நிலவிய ஒரு கட்டற்ற நாடாகும். ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 1947 ஆம் ஆண்டின் இந்திய விடுதலைச் சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட கட்டற்ற இரண்டு மேலாட்சி அரசுகளில் இந்திய ஒன்றியமும் ஒன்றாகும். 1950 இல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்பால் குடியரசாக மாற்றப்பட்டது.[1]

இந்திய ஒன்றியம்
Union of India
டொமினியன்
[[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|]]
1947–1950 [[இந்தியக் குடியரசு|]]
கொடி தேசியச் சின்னம்
தலைநகரம் புது டில்லி
மொழி(கள்) ஆங்கிலம், இந்திய மொழிகள்
அரசாங்கம் அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சி
இந்தியாவின் பேரரசர்
 -  1947-50 ஆறாம் ஜார்ஜ்
தலைமை ஆளுனர்
 -  1947-48 மவுண்ட்பேட்டன் பிரபு
 -  1948-50 ராஜாஜி
பிரதமர்
 -  1947-50 ஜவகர்லால் நேரு
வரலாற்றுக் காலம் பனிப்போர்
 -  இந்திய விடுதலைச் சட்டம், 1947 ஆகஸ்ட் 15 1947
 -  இந்திய-பாகிஸ்தான் போர், 1947 1947-48
 -  இந்தியக் குடியரசு நாள் ஜனவரி 26 1950
நாணயம் இந்திய ரூபாய்

ஐக்கிய இராச்சியத்தின் வேந்தரான ஆறாம் ஜார்ஜ் முழு இந்தியாவுக்கும் மன்னராக இருந்தார். அரசுத் தலைவராக இந்தியாவின் தலைமை ஆளுனரும் (கவர்னர் ஜெனரல்), பிரதமரும் இருந்தனர். கவர்னர் ஜெனரல் வைஸ்ராயாக நியமிக்கப்படவில்லை. பிரித்தானிய இராச்சியத்தின் கீழ் வழக்கமாக இருந்தது. வைஸ்ராய் அலுவலகம் சுதந்திரத்திற்கு பின்னர் இரத்து செய்யப்பட்டது. விடுதலைக்கும் இந்தியா குடியரசாக மாற்றப்படுவதற்கும் இடையில் மவுண்ட்பேட்டன் பிரபு (1947-48) மற்றும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1948-50) ஆகிய இரண்டு கவர்னர் ஜெனரல்கள் பதவி வகித்தனர்:. ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தார்.

சட்டத்துறைப் பயன்பாடுதொகு

இந்திய அரசிலமைப்பின் 300வது பிரிவில் ”இந்திய அரசின் மீது வழக்குத் தொடுப்போர் இந்திய ஒன்றியம் என்ற பெயரைப் பயன்படுத்தலாம், அரசும் இப்பெயரைக் கொண்டு வழக்கு தொடுக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியக் குடியரசின் நீதிமன்றங்களில் “இந்திய ஒன்றியம்” / ”இந்தியன் யூனியன்” என்ற பெயர் இந்திய அரசினைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. (எ.கா. எஸ். ஆர். பொம்மை எதிர் இந்திய ஒன்றியம்)

மேற்கோள்கள்தொகு

  1. Winegard, Timothy C. (2011), Indigenous Peoples of the British Dominions and the First World War, Cambridge University Press, pp. 2–, ISBN 978-1-107-01493-0
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_ஒன்றியம்&oldid=3598936" இருந்து மீள்விக்கப்பட்டது