இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872

இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872 ( Indian Contract Act 1872) இந்தியாவில் ஒப்பந்தம் குறித்து ஆங்கிலேயர் காலத்தில் 1872 ஆம் ஆண்டிற்கு முன், அனைவருக்கும் பொருந்தக் கூடிய ஒரே மாதிரியான பிரிவுகள் அடங்கிய சட்டம் ஒன்றும் இல்லாமலிருந்ததது. பல நிலப்பரப்புகள், பல பண்பாடுகள், பல அரசுகள் என்று பிளவுபட்டிருந்த காலங்களில் வாணிகத்தை நெறிப்படுத்த ஒரு முறையான சட்டம் தேவைப்பட்டது. இதற்காக இந்தச் சட்டம் 1872 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.[1]


இச்சட்டத்தில் மொத்தம் 238 பிரிவுகள் உள்ளன. இவற்றில் முதல் 75 பிரிவுகள் ஒப்பந்தத்தின் பொதுக் கோட்பாடுகள் குறித்து விளக்குகின்றன. அதன்பின் வரும் பிரிவுகள் தனிவகை ஒப்பந்தங்கள் சிறப்பு ஒப்பந்தங்கள், ஈட்டுறுதி ஒப்பந்தம் மற்றும் பொறுப்புறுதி ஒப்பந்தம், ஒப்படைவுமுகவாண்மை முதலியன குறித்து விளக்குகின்றன. இதனிடையே சரக்குகள் விற்பனைகுறித்தும் கூட்டாண்மை ஒப்பந்தம்குறித்தும் இச்சட்டத்தில் இருந்த பிரிவுகள் நீக்கப்பட்டு அவை தனிச்சட்டங்களாக இயற்றப்பட்டுள்ளன.[2]

  • ஒரு சில முக்கியமான விளக்கங்கள் (Definitions)பின்வருமாறு
  1. பிரிவு 2 (b) ஒப்பந்தம்சட்டத்தால் அமல்படுத்தக் கூடிய உடன்பாடே ஒப்பந்தம் ஆகும்.
  2. பிரிவு 2 (a) பரிவுரை அல்லது முனைவு (Proposal or Offer): ஒரு செயலை செய்வதாகவோ அல்லது செய்யாமலிருப்பதாகவோ ஒருவர் வேறொருவரிடம் கூறி அவரின் இசைவைப் பெற விரும்பினால் அது பரிவுரை ஆகும்.
  3. பிரிவு 2.(b) ஏற்பு (Acceptance): அவ்வாறு பரிவுரை செய்யப்பட்ட பின் வேறொருவர் அதனை ஏற்றுக்கொள்ளும் செயல் தான் ஏற்பு எனப்படும்.
  4. பிரிவு 2 (b),(c) உறுதியுரை (Promise): ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிவுரையே உறுதியுரை ஆகும்.
  5. பிரிவு 2 (c) உறுதியுரை அளிப்பவர் (Promisor) உறுதியுரை ஏற்பவர் (Promisee): பரிவுரையை தெரிவிக்கும் நபர் உறுதியுரையைத் அளிப்பவர் எனவும், அதனை ஏற்கும் நபர், உறுதியுரையை ஏற்பவர் எனவும் கூறப்படுவர்.
  6. பிரிவு 2 (d) மறுபயன் (Consideration): உறுதியுரையை ஏற்பவரோ அல்லது வேறு ஒருவரோ, உறுதியுரைக்காக செய்யப்படும் கைம்மாறு மறுபயன் எனப்படும்.
  7. பிரிவு 2(l) உடன்பாடு (Agreement): உறுதியுரை (Promise): ஒவ்வொரு உறுதியுரையும் ( Promise) அல்லது உறுதியுரைகளின் தொகுப்பு ஒவ்வொன்றும் (Set of Promises) ஒன்றுக்கொன்று மறுபயன் அளிக்கக் கூடியதாயின் அது உடன்பாடாகும்.
  8. பிரிவு 2(g) தகுதியில்லா உடன்பாடு (Void agreement): சட்டப்படி அமல் படுத்த முடியாத இந்த உடன்பாடு தகுதியில்லா உடன்பாடாகும்.
  9. பிரிவு 2 (i) தவிர்க்கக்கூடிய ஒப்பந்தம் (Voidable agreement): ஒப்பந்தம் ஏற்படுத்தக் கூடியவர்களில் யாரோ ஒருவர் விரும்பினாலும் தவிர்க்க இயலும் என்றால் அத்தகைய ஒப்பந்தம் இவ்வகையாகும்.
  10. பிரிவு 2 (j) செல்லத்தகாத ஒப்பந்தம் (Void contract): ஒப்பந்ததாரர்களால் செயல்படுத்த இயலாத ஒப்பந்தம் செல்லத்தகாத ஒப்பந்தம் ஆகும்.
  1. "Act No. 9 of 1872". Archived from the original on 2012-01-17. பார்க்கப்பட்ட நாள் 2018-02-18.
  2. http://lawmin.nic.in/ld/P-ACT/1872/A1872-9.pdf%7Cdate seen Feb 19,2018