இந்திய கதிரியல் மற்றும் படிம இயல் சங்கம்
இந்திய கதிரியல் மற்றும் படிம இயல் சங்கம் (Indian Radiological and Imaging Association-IRIA) என்பது நோயறிகதிரியல் துறைசார்ந்த மருத்துவர்களின் சிறப்பு சங்கமாகும். கதிரியல் துறைசார்ந்த படிப்பினை ஊக்கப்படுத்துதல், கதிரியல் துறையினை முன்னெடுத்துச் செல்வது, மீயொலி கணினி தள கதிர்படம், காந்த ஒத்ததிர்வு படமுறை, பாசிட்ரான் உமிழ்பு படமுறை போன்ற நுட்பமான படிம இயல் முறைகளை அதிகம் பயன்படுத்துவது போன்றவையாகும். கருக்கலைப்பிற்கு மீயொலி மற்றும் கதிரியல் கருவிகளை பயன்படுத்துவதை எதிர்க்கும் சங்கம் இது.
1931 -ல் கொல்கத்தாவில் முதலில் இந்திய கதிரியல் சங்கம் என்று மருத்துவர் அஜித்மோகன்போஸ் என்பவரால் தொடங்கப்பட்டது. 1932-ல் இந்திய மருத்துவ சங்கத்தின் ஓர் உறுப்பாக ஆனது. 1937-ல் பதிவு செய்யப்பட்டது. 1940 ல் சென்னையைச் சேர்ந்த மருத்துவர்கள் ராமாராவ், கே.எம். ராய், சாந்தன் கிருஷ்ணபிள்ளை போன்றவர்களின் பெருமுயற்சியால் வலுவான ஓர் அமைப்பானது. 1947 க்குபின் பல மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு தொடங்கப் பெற்று வளர்ந்த்து.