இந்திய குழந்தைப்பருவ ஈரல் இழைநார் வளர்ச்சி

இந்திய குழந்தைப்பருவ ஈரல் இழைநார் வளர்ச்சி (Indian childhood cirrhosis) குழந்தைப்பருவத்தில் கல்லீரலில் தோன்றும் ஒருவகையான நீடித்த நோயாகும். [1] உறுப்புத் தடிப்பு கோளாறு வகையாக அடையாளப்படுத்தப்படும் இந்நோய் கரணை நோய், ஈரல் இறுக்கி நோய் என்றும் அழைக்கப்படுகிறது. கல்லீரலில் தாமிரம் படிவதால் இழைமம் இற்றுப் போய் இணைமங்கள் மட்டுமீறி வளர்ச்சியடைவதால் இந்நோய் உண்டாகிறது. [2] பெரும்பாலும் 1–3 வயதுடைய குழந்தைகளை இந்நோய் பாதிக்கிறது. மரபுவழி காரணமும் இந்நோய் வருவதற்கான சாத்தியத்தைக் கொண்டுள்ளது. கடந்த காலத்தில் மிக உயர்ந்த இறப்பு விகிதத்தைக் [3] கொண்டிருந்த குழந்தைப்பருவ ஈரல் இழைநார் வளர்ச்சி நோய் தற்போது தடுக்கக்கூடியதாகவும் சிகிச்சையளிக்கக்கூடியதாகவும் மாறி இப்போது மிகவும் அரிய ஒரு நோயாக மாறிவிட்டது. [4]

வட அமெரிக்க இந்திய குழந்தைப் பருவ கல்லீரல் இழைநார் வளர்ச்சி. [5]

மேற்கோள்கள்

தொகு
  1. Editorial (August 2008). "Indian childhood cirrhosis: Several dilemmas resolved". Indian J Med Res 128 (2): 93–96. பப்மெட்:19001668. http://icmr.nic.in/ijmr/2008/august/editorial1.pdf. பார்த்த நாள்: 2021-02-27. 
  2. Tanner, MS (May 1998). "Role of copper in Indian childhood cirrhosis.". The American Journal of Clinical Nutrition 67 (5 Suppl): 1074S–1081S. doi:10.1093/ajcn/67.5.1074S. பப்மெட்:9587155. 
  3. Nayak, NC. Indian childhood cirrhosis-A reevaluation of its pathognomonic features and their significance in the light of clinical data and natural history of the disease. http://icmr.nic.in/ijmr/2012/december/IJMR%20Classic2.pdf. பார்த்த நாள்: 2021-02-27. 
  4. Pandit, A; Bhave, S (May 1996). "Present interpretation of the role of copper in Indian childhood cirrhosis.". The American Journal of Clinical Nutrition 63 (5): 830S–5S. doi:10.1093/ajcn/63.5.830. பப்மெட்:8615370. 
  5. Richter, A; Mitchell, GA; Rasquin, A (Nov 2007). "[North American Indian childhood cirrhosis (NAIC)].". Médecine/Sciences 23 (11): 1002–7. doi:10.1051/medsci/200723111002. பப்மெட்:18021715. 

மேலும் வாசிக்க

தொகு