இந்திய சாலைகள்

இந்திய சாலைகள் தொகு

            இந்தியாவில் 33 லட்சம் கி.மீ. நீளத்திற்குச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.இது உலக அளவில் இரண்டாவது இடமாகும்.இந்தியாவின் 65 சதவிகித சரக்குப் போக்குவரத்தும் 80 சதவிகித மக்கள் போக்குவரத்தும் சாலைகளின் மூலமேநடைபெறுகின்றன.தேசிய நெடுஞ்சலைகள் நாட்டின் ஒட்டுமொத்த சாலைகளில் 1.7 சதவிகிதம் மட்டுமே.ஆனால் நாட்டின் ஒட்டுமொத்த சரக்குப் பரிமாற்றதில் 40சதவிகிதம் சாலைகளில் வழியே நடைபெறுகின்றன.

சாலைகள் தொகு

            இந்தியாவில் பொதுவாக சாலைகளானது, தேசியநெடுஞ்சலைகள்,விரைவுச்சலைகள்,மாநிலநெடுஞ்சலைகள்,மாவட்டநெடுஞ்சலைகள்,கிரம சாலைகள் என ஐந்து வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தேசியநெடுஞ்சலைகள் (NATIONAL HIGHWAYS) தொகு

நாட்டின் பெரிய நகரங்கள்,மாநிலத் தலைநகரங்கள்,முக்கியப் பொருளாதார மண்டலகள்,துறைமுகங்கள் போன்றவற்றினை இணைப்பது தேசியநெடுஞ்சலைகளலாகும்.இவை இந்திய தேசியநெடுஞ்சலைப் பொறுப்பு ஆணையத்தால் (NHAI) நிர்வகிக்கபடுகின்றன.தேசியநெடுஞ்சலைகலானது ஒருவழிப்பாதை,இருவழிப்பாதை நான்கு,ஆறு மற்றும் எட்டுவழிப் பாதைகள் என பிரிக்கப்பட்டுள்ளதன.

மாநிலநெடுஞ்சலைகள் (STATE HIGHWAYS) தொகு

         மாநிலகளுக்களுள்ளே முக்கிய நகரங்களையும்,மாவட்ட தலைநகரங்களையும் இணைபவை மாநிலநெடுஞ்சலைகலாகும்.இவற்றை மாநில பொதுப்பணித்துறை அமைச்சகங்கள் கட்டமைத்து பராமரிக்கின்றன.

விரைவுச்சலைகள்(EXPRESS WAYS) தொகு

          விரைவுச்சாலைகள்  என்பவை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை  விட அதிக வசதிகளைக் கொண்டவை.6 அல்லது 8 வழிகளைக்கொண்ட இவை விரைவாகப் பயணம் செய்வதற்கென்றே  உருவாக்கப்பட்டவை .உத்திரபிரதேசத்தின் ஆக்ரா முதல் நொய்டா வரைசெல்லும்  165 கி.மீ நீளமுடைய யமுனா அதிவேக நெடுஞ்சாலையே(YAMUNA EXPRESS WAY) இந்தியாவிலன் மிக நீளமான அதிவேகமான நெடுஞ்சாலையாகும்.

மாவட்டநெடுஞ்சாலைகள்(DISTRICT ROADS) தொகு

          மாவட்டத்திற்குள் அமைந்துள்ள தாலுகா தலைமையகங்களையும் ,முக்கிய இடங்களையும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளோடு  இணைக்கிறது.இவற்றினை மாவட்ட அளவிலான நிர்வாகம் கட்டமைத்து பராமரிக்கின்றது. 

கிராமசாலைகள் தொகு

          கிராமங்களை அருகிலுள்ள நகரங்களோடு இணைக்கும் சாலைகள் கிராமசாலைகள் ஆகும்.

பார்வை https://en.wikipedia.org/wiki/Indian_road_network

இவற்றினை உள்ளாட்சி அமைப்புகளான கிராம சபைகளும்,நகராச்சிகளும் ,பேரூராட்சிகளும் கட்டமைத்து பராமரிக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_சாலைகள்&oldid=2760348" இலிருந்து மீள்விக்கப்பட்டது