இந்திய நிறுவன (திருத்தச்) சட்டம் 2015

2013-ஆம் ஆண்டு இந்தியாவின் நிறுவனங்களின் சட்டத்தின் சில மாற்றங்கள் வேண்டும் என்று வந்த வேண்டுகோள்களைப் பரிசீலித்த இந்திய அரசு 2013 ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தை திருத்தும் வகையில் 2014-ஆம் ஆண்டில் நிறுவனங்கள் (திருத்த) சட்ட முன் வடிவை (The Companies (Amendment) bill 2014) [1] பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி நிறைவேற்றப்பட்டது. இது 25.05.2015 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு நிறுவனங்களின் சட்டம் 2015 (The Companies (Amendmend) Act 2015) என்ற சட்டமாகியது. மொத்தம் 23 சட்டப்பிரிவுகளைக் கொண்டது இச்சட்டம்.[2]

இந்திய சின்னம்

முக்கிய அம்சங்கள் தொகு

  1. பங்கு மூலதனம். தனியார் நிறுவனத்திற்கும் பொது நிறுவனத்திற்கும் பதிவு செய்யும் பொழுது செலுத்தப்பட வேண்டிய பங்கு மூலதனத்தின் குறைந்த பட்ச வரம்பு நீக்கப்பட்டுவிட்டது.ஏற்கனவே அது முறையே ஒரு லட்சம் ரூபாய் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் என்றிருந்தது.
 
இந்திய பாராளுமன்றம்
  1. பொது முத்திரை .2013 ஆம் ஆண்டு சட்டப்பிரிவுகள் 9,12 மற்றும் 223ன் படி கட்டாயமாக இருந்த பொது முத்திரைப்பதிவு (Common Seal) தற்பொழுது விருப்பமாக்கப்பட்டது.மாற்றுச்சீட்டு (பிரிவு 22), பங்குச்சான்றிதழ் (பிரிவு 46(1)) முதலியவற்றில் இரு இயக்குநர்கள் அல்லது ஒரு இயக்குனர் மற்றும் இயக்குநர் செயலாளரும் கையொப்பமிட்டால் போதுமானது.
  1. தொழில் தொடங்குதல்.தொழில் தொடங்குவதற்கு முன் பெற வேண்டிருந்த சான்றுகளும், விளம்பிகளும் கைவிடப்பட்டுவிட்டன. 2013 ஆம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 11 நீக்கப்பட்டுவிட்டது.
  1. வைப்பீடு விதிகளை மீறுவதற்கு தண்டனை 2013 ஆம் ஆண்டு சட்டத்தில் வைப்பீடு பெறுவதற்கான விதிகள் வகுக்கப்பட்டன. 2015 ஆம் ஆண்டு சட்டத்தில், சட்டத்தை மீறியவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறிப்பிடப்பட்டுள்ளது.
  1. தீர்மானங்களைப் பார்வையிடலில் சில வரையறைகள் 2013 ஆம் ஆண்டு சட்டத்தில் ஒரு சில தீர்மானங்களைப் பொதுமக்கள் பார்வையிடவும் நகல் பெறவும் வகை செய்யப்பட்டிருந்தது. 2015 ஆம் ஆண்டு சட்டப்படி இத்தீர்மானங்களில் தொழில் தொடர்பான தீர்மானங்களைப் பொதுமக்கள் பார்வையிட முடியாது.(பிரிவு 117(3))
  1. பங்காதாய அறிவிப்பு. 2013 ஆண்டு நிறுவனச்சட்டத்தின் பிரிவு 123ன் படி நிறுவனங்கள் ஒரு சில நிபந்தனைகளுக்குட்பட்டு பங்காதாயத்தை ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கலாம்.2015 ஆம் திருத்தச்சட்டத்தில் இதற்கு ஒரு புதிய வரன் முறை சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு பங்காதாயம் அறிவிக்கும் நிறுவனங்கள்,முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட நட்டம் மற்றும் தேய்மானங்களை, தொடர்பான இனங்களுக்கு எதிராக வரவு வைத்த பின்பு பங்காதாயத்தைக் அறிவிக்கமுடியும்.
  1. தணிக்கையாளர் பொறுப்பு. ஏற்கனவே இருந்த 2013 ஆம் ஆண்டு சட்டத்தின் படி நிறுவனத்தின் ஊழியர்கள் மோசடி புரிந்திருப்பதாகத் தணிக்கையாளர் கவனத்திற்கு வந்திருந்தால் இது குறித்து மைய அரசிடம் தணிக்கையாளர் கட்டாயம் புகார் அளிக்கவேண்டும்.ஆனால் தற்போது இப்பிரிவிற்கு ஒரு சில வரம்புகள் விதிக்கப்பட்டு, இவ்வரம்புகளுக்கு உட்பட்ட நிகழ்வுகளில், தணிக்கையாளர் மைய அரசிடம் தெறிவிப்பதற்கு பதிலாக தணிக்கையாளர் குழுவிடம் (இயக்குனர்கள் அடங்கியது) புகார் அளித்து ஆண்டறிக்கையிலும் தெறிவிக்க வேண்டும்.
  1. கடன் வழங்குவதில் நெகிழ்வு. 2013 ஆம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 185ன் படி நிறுவனம், இயக்குநர் மற்றும் தொடர்பான நபர்கள், வேறு நிறுவனங்கள் ஆகியவற்றிற்குத் கடன் வழங்குவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. 2015 ஆம் சட்டத்தின்படி, பிடிப்பு நிறுவனம் (holding company) தமது துணை நிறுவனங்களுக்கு (subsidiary company) வழங்கும் கடன்கள், பொறுப்புறுதிகள், பிணயங்கள் ஆகியவைகளுக்கு பிரிவி 185 லிருந்து விலக்களித்துள்ளது. அதுபோல துணை நிறுவனம் தாம் பெற்ற கடனை தமது முதன்மைத் தொழிலிற்குப் பயன்படுத்த வேண்டும்.
  1. சார்பு நபர் நடவடிக்கை. 2013 ஆம் ஆண்டு சட்ட்த்தின் படி சார்பு நபர்களின் நடவடிக்கைகளுக்கு இயக்குநர் வாரியம் அல்லது பங்குதாரர்கள் 75 விழுக்காட்டினர் ஒப்புதலுடன் சிறப்புத் தீர்மானத்தின் மூலம் அனுமதி வழங்கப்படும். ஆனால் 2015 ஆம் சட்டத்தின் படி சிறப்புத் தீர்மானத்திற்குப் பதிலாக சாதாரணத்தீர்மானம் (75 விழுக்காட்டிற்குப் பதிலாக பெரும்பான்மை ஒப்புதல்) போதுமானது.
  1. சிறப்பு நீதி மன்றங்கள் அமைக்கும் அதிகாரம். 2013 ஆம் ஆண்டு சட்டத்தில் மைய அரசிற்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அளிக்கப்படிருந்த அதிகாரத்திற்கு ஒரு வரம்பு தற்பொழுது விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாண்டு மற்றும் அதற்கு மேலான தண்டனை விதிக்கும் குற்றங்களுக்கு மட்டுமே சிறப்பு நீதிமன்றம் அமைக்கலாம் மற்ற குற்றங்களை குற்றவியல் நீதித்துறை நடுவர்களே விசாரிக்க வேண்டும்.

மேற்கோள்கள் தொகு

  1. http://164.100.47.4/BillsTexts/LSBillTexts/Asintroduced/73_2016_LS_Eng.pdf | பார்த்த நாள் அகத்து 3, 2016
  2. http://www.mondaq.com/india/x/410320/Corporate+Commercial+Law/Companies+Amendment+Act+2015+Key+Highlights%7C பார்த்த நாள் அகத்து 3, 2016