இந்திய நிலா அந்துப்பூச்சி

பூச்சி இனம்
இந்திய நிலா அந்துப்பூச்சி
மேற்குத் தொடர்ச்சி மலையில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
சாட்டுருனிடே
பேரினம்:
ஆக்டியாசு
இனம்:
ஆ. செலீன்
இருசொற் பெயரீடு
ஆக்டியாசு செலீன்
கப்னர், 1807
வேறு பெயர்கள்

எக்கிட்னா செலினீ

ஆக்டியாசு செலீன், (Actias selene) இந்திய நிலா அந்துப்பூச்சி அல்லது இந்திய லூனா அந்துப்பூச்சி என்பது ஆசியாவைச் சேர்ந்த சாட்டர்னியிடே குடும்பத்தினைச் சேர்ந்த அந்துப்பூச்சி சிற்றினமாகும். இது முதன்முதலில் 1807-ல் ஜேக்கப் காப்னரால் விவரிக்கப்பட்டது. இந்த சிற்றினம் அமெச்சூர் பூச்சியியல் வல்லுநர்களிடையே பிரபலமானது. வணிக மூலங்களிலிருந்து கிடைக்கும் முட்டைகள் அல்லது கூட்டுப்புழுக்களிலிலிருந்து இவை பெரும்பாலும் வளர்க்கப்படுகிறது. இவை முக்கியமாக இரவில் காணப்படும். இதன் இறக்கைகளில் பிறை போன்ற பெரிய கண் வடிவ புள்ளிகள் உள்ளதாலும், இவ்வகை அந்துப்பூச்சிகள் இரவில் மட்டுமே பறப்பதால் லூனா அந்துப்பூச்சி (Luna moth) என்று அழைக்கப்படுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2015-ல்

பரவல் தொகு

இந்த அந்துப்பூச்சி மிகவும் பரவலாக காணப்படுகின்றது. இது இந்தியாவிலிருந்து ஜப்பான் வரையிலும் பின்னர் தெற்கே நேபாளம், இலங்கை, போர்னியோ மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள பிற தீவுகளிலும் காணப்படுகிறது. பாக்கித்தான், ஆப்கானித்தான், பிலிப்பைபீன்சு, உருசியா, சீனா, ஜாவா, இலங்கை, சுமத்திரா மற்றும் போர்னியோ ஆகிய நாடுகளில் பல கிளையினங்கள் வாழ்கின்றன.

அரோரா மற்றும் குப்தா (1979) கூற்றுப்படி இந்தியாவில் (சிக்கிம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மேற்கு வங்கம், பீகார், ஒரிசா, இமாச்சல பிரதேசம், உத்திரப்பிரதேசம், மகாராட்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் அந்தமான் தீவுகளிலும், காணப்படுகிறது.[1]

துணையினங்கள் தொகு

  • ஆக்டியாசு செலீன் செலீன் (ஹூப்னர், 1807)
  • ஆக்டியாசு செலீன் ப்ரெவிஜுக்ஸ்டா (நாசிக் & ட்ரெடாவே, 1997)
  • ஆக்டியாசு செலீன் எபார்தி ரூஜியோட், 1969 (ஆப்கானித்தான்)
  • ஆக்டியாசு செலீன் தாப்ரோபேனிசு பவுகிசுடாத் & பவுகிசுடாத் , 1999 (இலங்கை)

விளக்கம் தொகு

இளம் பச்சை நிறத்தில் பெரிய கண் போன்ற புள்ளிகளை இறக்கைகளில் கொண்ட இதன் இறக்கையின் நீட்டம் (அ) 114 மி.மீ. ஆகும். இறக்கை மாடம் 8-11.5 சென்டிமீட்டர் ஆகும் (3.1-4.5 அங்குலம்). இதன் நீளம் 17.78 சென்டிமீட்டர் வரை கூட இருக்கும். இதன் முன் மற்றும் பின் இறக்கைகளின் விளிம்புகள் அடர் சிவந்த வண்ணத்தில் காணப்படுகின்றன. பெண் அந்துப்பூச்சி சுமார் 200 முட்டைகள் வரை இலையின் அடிப்பாகத்தில் இடும். இவை 8 முதல் 13 நாட்களுக்கு அடைகாக்கப்படும். நல்ல தட்பவெப்பநிலையில் அந்துப்பூச்சிகள் அதிகமான முட்டைகளை இடும் தன்மையுடையன.

வாழ்க்கை சுழற்சி தொகு

முட்டைகள் 2 மி.மீ. அளவுடைய வெள்ளை நிறத்தில் கருப்பு மற்றும் பழுப்பு நிற கலவைகளுடன் பலவண்ண புள்ளிகளுடன் அமைந்துள்ளது. புதிதாக வெளிவந்த புழுக்கள் சிவப்பு மற்றும் கரு நிற அடிவயிற்று சேணம் கொண்டிருக்கும். இரண்டாவது இடைஉயிரி புழுக்கள் கரு நிற தலையுடன் சிவந்த நிறத்துடன் இருக்கும். மூன்றாவது இடைஉயிரி பச்சை வண்ணத்தில் இருக்கும். முழு வளர்ச்சி அடைந்த புழு 8–10 cm அளவில் ஆப்பிள் பச்சை வண்ணத்தில் ஜோடியான புறப்பக்க மற்றும் பக்கவாட்டிலுள்ள மஞ்சள் முள் முள்ளந்தண்டுகள் கடைசி பிரிவினைத்தவிர அனைத்து பிரிவுகளிலும் இருக்கும். தன்னைச்சுற்றி இலையில் பட்டு இழையினை பின்னிக்கொள்ளும்.[2]

 
Luna moth found in Kanchipuram district 02.jpg

புழு பருவம் தொகு

ஒவ்வொரு இடைஉயிரியும் (instar) முழுமை அடைய 5 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை ஆகும். முட்டையிலிருந்து சிறு புழுக்கள் பொரித்தவுடன் இவை பிர்ச், (புர்ஜா மரம்) வாதுமை கொட்டை, பெர்சிம்மன், (சீமை பனிச்சை), புங்கம் போன்ற மரங்களின் இலைகளை உண்ணும். இந்த புழுக்கள் 2-3 இடைஉயிரிகள் வரை கூடி வாழ்கின்ற தன்மை உடையதாக இருக்கும். பின்னர் தனியே வாழத்தொடங்கிவிடும். இவை (5 இடைஉயிரிகள் கடந்த பிறகே கூடு கட்டத் தொடங்கும்.[3]

கூட்டுப்புழு பருவம் தொகு

வாழ்க்கைச் சுழற்சியின் புழுப்பருவ இறுதியில் லூனா அந்துப்பூச்சி கூடு கட்டி கூட்டுப்புழுவாக மாறும். கூட்டுப்புழு பருவம் பொதுவாக 2 வாரங்கள் வரை நீடிக்கும்.

முழுவளர்ச்சி அடைந்த பூச்சி தொகு

முழுவளர்ச்சி அடைந்த பூச்சி 3 வாரங்களில் பட்டுக்கூட்டிலிருந்து வெளிவரும். முழுவளர்ச்சி அடைந்த பூச்சியின் இறக்கை நீட்டம் 116-122 மிமி இருக்கும். 60 mm பின் இறக்கைகள் இளம்சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். மிகுந்த உணர்திறன் வாய்ந்த நுண்ணுணர்வு ஏற்பிகளால் 4 முதல் 11 கி.மீ. தொலைவில் உள்ள ஒற்றை பாலியல் பெரோமோன் மூலக்கூறை இந்தியன் லூனா அந்துப்பூச்சி அறியும் திறனை பெற்றுள்ளது. கூட்டுப்புழுவிலிருந்து அந்துப்பூச்சி வெளிவரும் போது அதன் சிறகுகள் மிகவும் சிறியதாக இருக்கும். இதன் இறக்கைகளில் உள்ள கண் வடிவ புள்ளிகள் இவற்றை எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ளவும் குழப்பமடைய செய்யவும் பயன்படுகிறது. முதிர்பருவம் அடைந்தவுடன் அந்துப்பூச்சிகள் உணவு உட்கொள்ளாது. மேலும் இதற்கு உணவு உட்கொள்ள வாய்ப்பகுதியும் இல்லை. இதனால் ஒரு வாரம் மட்டுமே உயிர் வாழும். இச்சமயத்தில் தன இணையுடன் சேரும். பெண் அந்துப்பூச்சி சுமார் 200 முட்டைகள் வரை இலையின் அடிப்பாகத்தில் இடும். இவை 8 முதல் 13 நாட்களுக்கு அடைகாக்கப்படும். நல்ல தட்பவெப்பநிலையில் அந்துப்பூச்சிகள் அதிகமான முட்டைகளை இடும். ஆண் அந்துப்பூச்சிகளுக்கு பெண் அந்துப்பூச்சிகளை விட உணர்கொம்புகள் சற்று பெரியதாகவும் அகன்றதாகவும் இருக்கும். மேலும் லூனா அந்துப்பூச்சி தீங்கிழைக்கும் தீங்குயிரி அல்ல. பயிர்களுக்கு சேதம் விளைவிப்பது இல்லை.[4]

வாழ்க்கை சுழற்சி படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Arora GS, Gupta IJ (1979). Taxonomic studies of some of the Indian non-mulberry silkmoths (Lepidoptera: Saturniidae). Memoirs of Zoological Survey of India 16:1-63
  2. Rajadurai, S and Thangavelu. K., 1998. Biology of Moon Moth Actias selene Hubner (Lepidoptera : Satumiidae) present in Bhandara forest, Maharashtra. Proc. IIIrd Int. Conf. on wild silkmoth, pp. 362–366.
  3. Kavane R. P 2015. Occurrence of natural food plants of Indian moon moth Actias selene (Hubner) silkworm from India. Biolife, 3(2), pp 496–498.
  4. George Hampson (1892). The Fauna of British India, Including Ceylon and Burma: Moths Volume I. Taylor and Francis. https://www.biodiversitylibrary.org/item/180068#page/5/mode/1up.