இந்திய படிப்பு சங்கம்

இந்திய படிப்பு சங்கம் (India Study Channel), என்பது இந்தியாவில் இணையவழி கல்வி வழங்கும் நிறுவனம் ஆகும். இதனை டிம்மி ஜான் என்பவர் இந்தியாவின் 2007ஆம் ஆண்டில் நிறுவினார். தற்போது அவரது சகோதரர் டோனி ஜான் என்பவர் இவ்விணைய வழி கல்வி நிறுவனத்தை நட்த்தி வருகிறார். இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களின் பட்டியல், அவைகள் வழங்கும் படிப்புகள், உதவித் தொகைகள், கல்வி நிறுவனங்களின் முந்தைய ஆண்டின் தொழில் முறை கேள்வி - பதில்கள், மற்றும் வேலை வாய்ப்புச் செய்திகள் ஆகியவற்றை இவ்விணையதளம் வழங்குகிறது. இதனால் மேல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கும், வேலை தேடும் படித்த மாணவர்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது. [1]

மேற்கோள்கள் தொகு

  1. "Top Sites". Alexa Internet இம் மூலத்தில் இருந்து 6 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141106144201/http://www.alexa.com/topsites/category/Regional/Asia/India/Education. பார்த்த நாள்: 15 September 2014. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_படிப்பு_சங்கம்&oldid=3458482" இலிருந்து மீள்விக்கப்பட்டது