இந்திய பெண்கள் விஞ்ஞானிகள் சங்கம்

இந்திய பெண்கள் விஞ்ஞானிகள் சங்கம் (Indian Women Scientists' Association) என்பது 1973 முதல் இந்திய பெண்கள் விஞ்ஞானிகளுக்கு சேவை செய்யும் ஒரு ,அரச சார்பற்ற இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஓ.) ஆகும்.வஷியையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இது பத்து கிளைகளை கொண்டுள்ளது.இது விடுதி மற்றும் தோட்டம் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.இங்கு கணினி பயிற்சி மையம், சுகாதார மையம்,அறிவியல் நூலகம் மற்றும் தொடக்கநிலை ஆசிரியரின் பயிற்சித் திட்டம் போன்றவற்றை நடத்துகிறது. நிறுவனத்தின் முதல் தலைவர் சுமதி பிடே ஆவார்.[1]

நோக்கங்கள்

தொகு
  1. இந்திய பெண்கள் விஞ்ஞானக் கோட்பாட்டை வளர்த்துக் கொள்ள வகை செய்தல்.
  2. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு துறைகளில் பெண்களின் அறிவியல் சாதனைகளை ஊக்குவித்தல்.
  3. பல்வேறு விஞ்ஞான துறைகளில் கல்வியுடனான பெண்களின் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளை புரிந்து மேபாடு அடையச்செய்தல்.
  4. பல்வேறு விஞ்ஞான துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு பிரதிநிதித்துவ அமைப்பை ஏற்படுத்துதல்.
  5. அறிவியல் சார்ந்த துறைகளில் பெண்களின் பிரச்சினைகளை புரிந்துகொள்ளுதல்.
  6. பிரச்சினைகளை களைதல்

சிறப்பம்சங்கள்

தொகு
  • சமூகம் சார்ந்த செயல்பாடுகள்
  • சமூக சுகாதார மையம்
  • பராமரிப்பு மையம்
  • நாற்றங்கால் பள்ளி
  • பெண்கள் விடுதி
  • நூலகம் / வாசிப்பு அறை
  • புலமைப்பரிசில்கள் மற்றும் விருதுகள்
  • கணினி திறன் மேம்பாடு மற்றும் ஐ.டி பயிற்சி
  • அறிவியல் கழகம்

அறிவியல் தொடர்பான பயிற்சிகள்

தொகு
  • அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகள்
  • பிரபல அறிவியல் விரிவுரையாளர் சொற்பொழிவுகள் (BRNS ஆதரவுடன்)
  • மாணவர்கள் / ஆசிரியர்களுக்கான அறிவியல் பட்டறைகள்
  • அறிவியல் போஷாக்கு திட்டம்
  • ஆராய்ச்சி திட்டங்கள்
  • சுற்றுச்சூழல் / அறிவியல் விழிப்புணர்வு
  • மாநாடுகள் / கருத்தரங்குகள்

சான்றுகள்

தொகு

வெளிஇணைப்புகள்

தொகு