இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 என்பது இந்திய ரிசர்வ் வங்கியை நிறுவுவதற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட, இந்தியா முழுமைக்கும் பொருந்தும் ஒரு சட்டமாகும்[1]. இச்சட்டம் பின்வரும் தலைப்புகளில் உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது:
- இந்திய ரிசர்வ் வங்கியின் கூட்டுருவாக்கம், முதல், மேலாண்மை, அலுவல் (சட்டப் பெரும்பிரிவு II)
- வங்கியின் செயல்பாடுகள் (சட்டப் பெரும்பிரிவு III)
- கடன் குறித்த தகவல்களை சேகரித்தல், வழங்குதல் (சட்டப் பெரும்பிரிவு IIIA)
- வங்கியியல் சாரா நிறுவனங்கள் வைப்புகளைப் பெருவதில் வழிவகுப்புகளும் நிதியியல் நிறுவனங்களுக்கான ஏற்பாடுகளும் (சட்டப் பெரும்பிரிவு IIIB)
- (சட்டப்படி) உருவாக்கப்படாத அமைப்புகள் வைப்புகளைப் பெறுவதைத் தடை செய்தல் (சட்டப் பெரும்பிரிவு IIIC)
- வழிப்பொருள் சந்தைகள், நிதிச்சந்தை கருவிகள், ஈட்டாவணங்கள் ஆகியவற்றில் பரிமாற்றங்களை நெறிப்படுத்துதல் (சட்டப் பெரும்பிரிவு IIID)
- [IIID பிரிவிலுள்ள கருவிகளின்] கூட்டுச் செயலமைவு (சட்டப் பெரும்பிரிவு IIIE)
- நிதிக் கொள்கை(சட்டப் பெரும்பிரிவு IIIF)
- பொதுச் சட்டங்கள் (சட்டப் பெரும்பிரிவு IV)
- தண்டங்கள் (சட்டப் பெரும்பிரிவு V)[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Reserve Bank of India Act". rbi.org.in/. பார்க்கப்பட்ட நாள் 19 Dec 2021.