இந்திய லினக்சு பயனர் குழுமம், சென்னை
இந்திய லினக்சு பயனர் குழுமம், சென்னை (Indian Linux Users Group, Chennai-ILUGC) ஒரு லினக்ஸ் பயனர் குழுமம் ஆகும். இது இந்தியா லினக்ஸ் பயனர் குழுமத்தின் சென்னை பிரிவாகும்.
வரலாறு
தொகுஇது 1997ல் தொடங்கப்பட்டது. இது முனைவர் பிரபு ராமச்சந்திரன், அருண் மற்றும் நண்பர்களின் துணையுடன் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையின் விண்வெளி துறையில் பணிபுரியும் முனைவர் ஸ்ரீராம் ஆதரவுடன் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை தோறும் குனு / லினக்ஸ் , பேர்ல், பைதான், பி எச் பி, ஃப்ரீ, டிசிபி, ஐபி, குனு , பிஎஸ்டி உள்ளிட்ட தொடர்பான தலைப்புகளில் தொழில்நுட்பப் பேச்சுகள் நடைபெறுகின்றன.
நடைபெறும் இடம்
தொகுவகுப்பறை எண் 1, ஏரோ ஸ்பேஸ் பொறியியல் கட்டிடம், கஜேந்திர வட்டம் அருகில், சென்னை ஐஐடி.
செயல்பாடுகள்
தொகு- 2004ல் மென்பொருள் சுதந்திர நாள் மற்றும் கருத்தரங்கு [1]
- 2009ல் கட்டற்ற மென்பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு [2]
- 2009ல் இலவச மற்றும் திறந்த மூல மென்பொருள் மாநாடு மதுரையில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி மற்றும் தேசிய இலவச திறந்த மூல மென்பொருள் வள மையத்துடன் இணைந்து பிப்ரவரி 27, 2009 முதல் மார்ச் 1, 2009 வரை நடத்தப்பட்டது. [3] [4]
பங்களிப்புகள்
தொகுபல கருத்தரங்குகள், விருந்தினர் விரிவுரைகள் பல்வேறு கல்லூரிகளில் இந்திய லின்க்சு பயனர் குழுமத்தின் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
- லினக்ஸ் சோதனை நாள்
- கட்டற்ற மென்பொருள்
- மென்பொருள் சுதந்திர நாள்
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகுஉசாத்துணைகள்
தொகு- ↑ View software as service, not as bundled commodity
- ↑ FOSS potential yet to be tapped
- ↑ Campus Connect[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "FOSS Conference in Madurai". Archived from the original on 2014-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-02-17.