இந்திய வம்சாவளித் தமிழர்கள்
இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்போர் வரலாற்று ரீதியாக இந்தியாவில் இருந்து இலங்கையில் குடியேறிய தமிழர்களை குறிக்கும்.[1] "இந்திய வம்சாவளித் தமிழர்" என்றால் மலையகத் தமிழர் என்று கருதும் நிலை வரலாற்று அடிப்படையில் தவறானதாகும். மலையகத் தமிழர் 19ஆம் நூற்றாண்டளவில் பிரித்தானியரின் ஆட்சியின் போது இந்தியாவில் இருந்து பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காக அழைத்துவரப்பட்டவர்கள் என்பதனால் அவர்களும் "இந்திய வம்சாவளித் தமிழர்" எனும் பகுப்புக்குள் உள்ளடங்குகின்றனர்[2] என்றாலும், அதற்கு மிக முற்பட்ட காலமான போர்த்துக்கீசரின் வருகைக்கு முன்பிருந்தே இலங்கையில் வந்து குடியேறிய இந்திய வம்சாவளித் தமிழர் என்போரின் வரலாறு மிக நீண்டதாகும்.
வரலாறுதொகு
தமிழ் நாட்டு மன்னர்கள் இலங்கையை தமது ஆட்சிக்குள் கொண்ட வந்த காலங்கள் முதல்