இந்திய வரிவிதிப்பு முறை
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இந்தியாவில் வரிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் வசூல் செய்யப்படுகின்றன. மிகச் சிறிய அளவிலான வரிகள் உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படுகின்றன. வரி விதிப்பு மற்றும் வசூலுக்கான அதிகாரத்தை மத்திய மாநில அரசுகளுக்கு இந்திய அரசியல் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 265ன் படி சட்டத்தின் மூலமே வரிகள் வசூல் செய்ய முடியும். எனவே மக்களிடம் வசூலிக்கப்படும் அனைத்து வரிகளும் பாராளுமன்றத்தாலோ அல்லது மாநில சட்டசபைகளாலோ சட்டமாக inஇயற்றப்பட்டிருக்கவேண்டும்.