இந்திய வானியற்பியல் மையம்
இந்திய வானியற்பியல் நிலையம் (இந்திய வானியற்பியல் கழகம்), வானியல், வானியற்பியல், இவை தொடர்பான இயற்பியல் ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒரு முதன்மை நிறுவனமாகும். இதன் முதன்மை வளாகம் பெங்களூரு கோரமங்களாவில் உள்ளது.
வகை | ஆய்வு மையம் |
---|---|
உருவாக்கம் | 1786 |
பணிப்பாளர் | பேராசிரியர் பி. ஸ்ரீகுமார்[1] |
அமைவிடம் | , , |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | http://www.iiap.res.in |
இந்நிலையத்தின் அங்கங்களாக காவலூரில் வைணு பாப்பு ஆய்வரங்கம், கொடைக்கானலிலுள்ள சூரிய ஆய்வரங்கம், கவுரிபிதனூர் ஆய்வரங்கம், அன்லேவிலுள்ள இந்திய வானியல் ஆய்வரங்கம் ஆகிய ஆய்வரங்கங்கள் உள்ளன.[2]
பெங்களூரு ஓசாகோடேவில் அறிவியல், தொழில்நுட்ப ஆய்வு, கல்வி மையம் (Centre for Research and Education in Scienc and Technology) அமைந்துள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Director's Page | Indian Institute of Astrophysics". Iiap.res.in. 2007-06-25. பார்க்கப்பட்ட நாள் 2013-07-31.
- ↑ 2.0 2.1 ஐஐஏ வின் வலைத்தளம்